தமிழ் திரையுலகில் முன்னணி நடிகையாக திகழ்ந்தவர் ஹன்சிகா மோத்வானி. இவர் உச்ச நட்த்திரங்கள் ஜோடியாக பல படங்களில் நடித்துள்ளார். அண்மையில் தொழிலதிபர் சோஹேலுடன் இவருக்கு பிரம்மாண்டமாக திருமணம் நடந்து முடிந்தது. இந்நிலையில் ஹன்சிகாவின் தாயார் மாப்பிள்ளை வீட்டாரிடம் வைத்துள்ள கோரிக்கை இணையத்தில் வைரலாகி வருகிறது.
தமிழ் மட்டுமில்லாமல் தெலுங்கு, கன்னடம் மற்றும் இந்தி உள்ளிட்ட மொழிகளில் ஏராளமான படங்களில் நடித்துள்ளார் ஹன்சிகா. தமிழில் விஜய், சிம்பு, சூர்யா, ஜெயம் ரவி, கார்த்தி உள்ளிட்ட பல முன்னணி நடிகர்களுடன் இணைந்து நடித்துள்ளார். இவர் தன்னுடைய குடும்ப நண்பர் பிரபல தொழிலதிபரான சோஹேல் கதூரியாவை திருமணம் செய்து கொண்டார். இவர் மும்பையை சேர்ந்தவர்.
அண்மைச் செய்திகளை உடனடியாக படிக்க கூகுள் நியூஸில் தமிழ் சமயம் இணையதளத்தை பின் தொடரவும்
கடந்த வருடம் டிசம்பர் 4 ஆம் தேதி ஜெய்ப்பூர் நகரத்தில் உள்ள 450 வருடங்களுக்கு முன்பான பழமை வாய்ந்த மண்டோடா ஃபோர்ட் அரண்மனையில் இவர்களது திருமணம் பிரம்மாண்டமாக நடந்து முடிந்தது. மேலும் இவர்களது திருமணம் தொடர்பான போடோக்கள் மற்றும் வீடியோக்கள் சோஷியல் மீடியாவில் படு வேகமாக வைரலானது.
இவர்களின் திருமணம் குறித்த நிகழ்வுகள் “லவ் ஷாதி டிராமா“ எனும் பெயரில் டிஸ்னி பிளஸ் ஹாட்ஸ்டார் ஓடிடி தளத்தில் ஒளிப்பரப்பாகி வருகிறது. இந்நிலையில் இதன் சமீபத்திய எபிசோட்டில் ஹன்சிகாவின் தாயார் மோத்வானி, தனது மருமகன் சோஹேல் கதுரியாவின் குடும்பத்தாரிடம் 5 லட்சம் ரூபாய் கேட்டதாக கூறியுள்ள சம்பவம் பரபரப்பை கிளப்பியுள்ளது.
AK 62: கைவிட்டு போன ‘ஏகே 62’ பட வாய்ப்பு: விக்னேஷ் சிவன் இப்ப என்ன சொல்லிருக்காரு பாருங்க.!
அதில் ஹன்சிகாவின் திருமண நிகழ்வின் போது சோஹேல் குடும்பத்தினர் தாமதமாக வந்தது வருத்தத்தை ஏற்படுத்தியதாக கூறியுள்ளார். அத்துடன் கதுரியாக்கள் மிகவும் தாமதமாக வரக்கூடியவர்கள். இதனால் திருமணத்தின் போது ஒவ்வொரு நிமிட தாமதத்திற்கு 5 லட்சம் ரூபாய் கொடுக்க வேண்டும். சுபமுகூர்த்த நேரம் மாலை 4.30 மணி முதல் 6 மணி வரை இருப்பதால் இந்த கோரிக்கையை முன் வைக்கிறேன்.
இதனால் நீங்கள் சீக்கிரம் வர வேண்டும் என மாப்பிள்ளை வீட்டாரிடம் நடிகை ஹன்சிகாவின் தாயார் மோனா மோத்வானி கோரிக்கை வைத்துள்ளார். கல்யாணத்திற்கு முன்பே சோஹேல் குடும்பத்தினரிடம் ஹன்சிகாவின் தாயார் டீல் போட்டுள்ள வீடியோ தற்போது சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.
வெர்ஜினா நீங்க.? டேட் போலாமா..?: எக்குத்தப்பான கேள்விகளுக்கு ஸ்ருதிஹாசனின் அதிரடி பதில்.!