கடந்த 2022ம் ஆண்டில் 1.1 மில்லின் பேர் நாட்டை விட்டு வெளியேறியுள்ளனர்.
இவ்வாறு நாட்டை விட்டு வெளியேறியவர்களில் 27.6 வீதமானவர்கள் வெளிநாட்டு வேலை வாய்ப்பு பெறும் நோக்கில் நாட்டை விட்டு வெளியேறியுள்ளனர்.
இலங்கை மத்திய வங்கி வெளியிட்டுள்ள அறிக்கையில் இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.
விநியோகிக்கப்பட்ட கடவுச்சீட்டுக்கள்
கடந்த ஆண்டில் மொத்தமாக 1,127,758 பேர் நாட்டை விட்டு வெளியேறியுள்ளனர்.
கடந்த ஆண்டு 911757 கடவுச்சீட்டுக்கள் விநியோகம் செய்யப்பட்டுள்ளன.
வெளிநாட்டு வேலைவாய்ப்புக்களுக்காக 311,269 பேர் பயணம் செய்துள்ளனர்.
இவ்வாறு வெளிநாட்டு வேலைவாய்ப்பை பெற்றுக் கொள்ளும் நோக்கில் பயணித்தவர்களில் அதிக எண்ணிக்கையிலானவர்கள் மத்திய கிழக்கு நாடுகளுக்கு பயணம் செய்துள்ளனர்.