கனேடிய நகரமொன்றில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட குழந்தை ஒன்று உயிரிழந்தது.
மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட குழந்தை மரணம்
இம்மாதம், அதாவது மார்ச் மாதம் 7ஆம் திகதி, ஆல்பர்ட்டாவிலுள்ள Stollery மருத்துவமனையில் ஐந்து மாதக் குழந்தை ஒன்று அனுமதிக்கப்பட்டது.
11ஆம் திகதி அந்தப் பெண் குழந்தை இறந்துபோனாள்.
உடற்கூறு ஆய்வில் தெரியவந்த அதிர்ச்சியளிக்கும் உண்மை
மருத்துவர்கள் அந்தக் குழந்தையின் உடலுக்கு உடற்கூறு ஆய்வு மேற்கொண்டபோது, அதிர்ச்சியளிக்கும் தகவல் ஒன்று தெரியவந்தது.
ஆம், அந்த குழந்தை அடிபட்டதால், அதாவது கடுமையாக தாக்கப்பட்டதால் உயிரிழந்திருந்தாள். ஆகவே, அதை கொலை வழக்காக கருதி பொலிசார் விசாரணை மேற்கொள்ளத் துவங்கியுள்ளார்கள்.
அந்தக் குழந்தையைத் தாக்கியது யார், அந்தக் குழந்தையின் பெற்றோர் யார் என்பது குறித்த எந்த விவரங்களையும் பொலிசார் வெளியிடவில்லை.