அமெரிக்காவில் கருக்கலைப்பு மாத்திரைகள் பயன்படுத்துவதை தடை செய்த முதல் மாநிலமானது வயோமிங் (Wyoming).
முதல் அமெரிக்க மாநிலம்
வயோமிங் மார்ச் 17 அன்று மருந்து கருக்கலைப்பு மாத்திரைகளின் பயன்பாடு அல்லது பரிந்துரைக்கப்படுவதை தடை செய்த முதல் அமெரிக்க மாநிலமாக மாறியுள்ளது.
வயோமிங் கவர்னர் மார்க் கார்டன் (Mark Gordon), மாநிலத்தில் கருக்கலைப்பு மாத்திரைகளை தடை செய்யும் மசோதாவில் கையெழுத்திட்டார்.
இருப்பினும், உடலுறவுக்குப் பிறகு கர்ப்பத்திற்கு முன் காலையில் பயன்படுத்தப்படும் கருத்தடை மாத்திரைகளுக்கு தடையிலிருந்து விலக்கு அளிக்கப்படுகிறது.
Gov. Mark Gordon Pic: Megan Lee Johnson/WyoFile
எப்போது நடைமுறைக்கு வரும்
கருக்கலைப்பு மாத்திரைகள் மீதான வயோமிங்கின் தடை ஜூலையில் நடைமுறைக்கு வரும்.
தடையை மீறினால் கிரிமினல் குற்றமாக கருதப்பட்டு ஆறு மாதங்கள் வரை சிறைத்தண்டனை விதிக்கப்படும்.
கடந்த ஆண்டு உச்ச நீதிமன்றத்தின் முக்கிய தீர்ப்பைத் தொடர்ந்து கருக்கலைப்புக்கு எதிரான மொத்தத் தடையை வென்றெடுக்கும் முயற்சியில் கருக்கலைப்பு எதிர்ப்புக் குழுக்களால் நாடு முழுவதும் பரவலான நடவடிக்கை எடுத்துவரும் சூழலுக்கு மத்தியில், வயோமிங் மாநிலத்தின் இந்த நடவடிக்கை வந்துள்ளது.
Kevin Lemarque | Reuters
“எல்லா உயிர்களும் புனிதமானது என்றும், பிறக்காதவர்கள் உட்பட ஒவ்வொரு தனிநபரும் கண்ணியத்துடனும் கருணையுடனும் நடத்தப்பட வேண்டும் என்று நான் நம்புகிறேன்,” என்று கோர்டன் வெள்ளிக்கிழமை மாலை வெளியுறவுத்துறை செயலாளருக்கு எழுதிய கடிதத்தில் கூறினார்.
மேலும், கருக்கலைப்புக்கு எதிரான போராட்டத்தில் பின்வாங்கப் போவதில்லை என்று அவர் கூறினார்.