சென்னை: கூட்டணியை பொறுத்தவரை அதிமுகவே ரயில் என்ஜின் போன்றது என முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்துள்ளார். ரயிலில் எந்தெந்த பெட்டிகள் இடம்பெற வேண்டும் என்பதை என்ஜின்தான் முடிவு செய்யும். கட்சி விதிகளின்படியே பொதுச்செயலாளர் தேர்தலை நடத்துகிறோம். பொதுச்செயலாளர் தேர்தல் தொடர்பாக ஓ.பன்னீர்செல்வம் தரப்பு பேசுவது பற்றி எந்தக் கவலையும் இல்லை என ஜெயக்குமார் தெரிவித்தார்.