சிவகங்கை மாவட்டம் உலகம்பட்டி பகுதியில் உள்ள குளத்தில் ஒரே குடும்பத்தை சேர்ந்த 3 குழந்தைகள் உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
சிவகங்கை மாவட்டம் உலகம்பட்டி கிராமத்தில் உள்ள நாகராஜ் என்பவரின் மகள் யாழினி (வயது 10) மற்றும் நாகராஜன் சகோதரர் லட்சுமணனின் மகன்கள் மகேந்திரன் (வயது 7), சுந்தர் (வயது 5) ஆகியோர் குளத்தில் மூழ்கி உயிரிழந்துள்ளனர்.
இதனையடுத்து சம்பவம் குறித்து விரைந்து வந்த போலீசார் விசாரணை நடத்தி வந்தனர். மேலும், உயிரிழந்த சிறார்களின் உடல்கள் பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டது. ஒரே குடும்பத்தை சேர்ந்த 3 குழந்தைகள் உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.