ரம்ஜான் நேரத்தில் நோன்பு இருக்க வேண்டும் என்பதால், இஸ்லாமியர்களுக்கு பணி நேரத்தில் மாற்றம் செய்து பீகார் அரசு அற்புதமான அறிவிப்பை வெளியிட்டுள்ளது.
இது தொடர்பாக வெளியிடப்பட்டுள்ள சுற்றறிக்கையில், இஸ்லாமிய அதிகாரிகள் மற்றும் ஊழியர்கள் ரம்ஜான் மாதத்தில் வழக்கமான பணி நேரத்திற்கு ஒரு மணி நேரத்திற்கு முன்னதாக அலுவலகம் வரலாம்.
அதே போல் அவர்கள் ஒரு மணி நேரத்திற்கு முன்னதாக அலுவலகத்தை விட்டு வெளியேற அரசு அனுமதி வழங்கப்பட்டுள்ளத. ஒவ்வொரு ஆண்டும் ரம்ஜான் மாதத்தில் இந்த உத்தரவு நிரந்தரமாக அமலுக்கு வரும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்த அறிவிப்புக்கு பல்வேறு தரப்பினரும் வரவேற்பு தெரிவித்துள்ளனர். நாட்டின் மதச்சார்பற்ற கட்டமைப்பை வலுப்படுத்த இது பெரிதும் உதவும் என்று அரசியல் கட்சிகள் கூறியுள்ளன. இந்த நடவடிக்கையால், இஸ்லாமிய ஊழியர்களுக்கு மாலையில் நோன்பு துறக்க போதுமான நேரம் கிடைக்கும்.
அவர்கள் வேலை நேரத்திற்கு ஒரு மணி நேரம் முன்னதாக அலுவலகத்திற்கு வருவதால், வேலை பாதிக்கப்படாது என்றும் பலரும் கருத்து தெரிவித்து வருகின்றனர்.
இந்நிலையில், நவராத்ரி மற்றும் ராமநவமி பண்டிகையின் போது இந்து ஊழியர்களுக்கும் இதேபோன்ற அனுமதியை வழங்க வேண்டும் என பாஜக தலைவர் அரவிந்த் குமார் கேட்டுக் கொண்டுள்ளார்.
newstm.in