ஸ்ரீநகர்,
ஜம்மு காஷ்மீர் மாநிலம் புல்வாமா மாவட்டத்தில் பேருந்து ஒன்று பயணிகளுடன் சென்றுக் கொண்டிருந்தது. பர்சூ பகுதியில் ஸ்ரீநகர்-ஜம்மு தேசிய நெடுஞ்சாலையில் பேருந்து சென்றுகொண்டிருந்தபோது திடீரென ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்த பேருந்து கவிழ்ந்து விபத்துக்குள்ளானது.
இந்த விபத்தில் பீகாரைச் சேர்ந்த 4 பயணிகள் உயிரிழந்தனர். 28 பயணிகள் படுகாயமடைந்தனர். அவர்களில் 23 பேர் சிகிச்சைக்காக பல்வேறு மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
விபத்து குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து, விபத்துக்கான காரணம் குறித்து விசரணை நடத்தி வருகின்றனர்.
Related Tags :