புதுக்கோட்டை அருகே இளம்பெண்ணை கொலை செய்துவிட்டு, இளைஞர் ஒருவர் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பரபரப்பையும், அதிர்ச்சியையும் ஏற்படுத்தி உள்ளது.
மகள் உறவுமுறை உடைய இளம் பெண்ணை காதலித்து வந்த இளைஞர் ஒருவர், காதலை ஏற்க இளம் பெண் மறுத்ததால், அவரை கழுத்து அறுத்து கொலை செய்து விட்டு, தானும் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அரங்கேறியுள்ளது.
புதுக்கோட்டை மாவட்டம், மயிலாடிகாடு கிராமத்தைச் சேர்ந்த இளம் பெண்ணை, தந்தை முறை உள்ள துரைக்கண்ணு என்ற இளைஞர் ஒருதலையாக காதலித்து வந்ததாக சொல்லப்படுகிறது.
இந்நிலையில், தனது காதலை ஏற்க மறுத்த இளம்பெண்ணை கழுத்து அறுத்து கொலை செய்த துரைக்கண்ணு, தானும் தற்கொலை செய்து கொண்டார்.
இருவரின் உடலையும் கைப்பற்றிய போலீசார், பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர்.
மேலும் இந்த சம்பவம் குறித்து வழக்கு பதிவு செய்துள்ள போலீசார் மேலும் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.