கைதான குற்றவாளியை அவரின் சொந்த வாகனத்திலேயே அழைத்து சென்ற விவகாரத்தில், சிறப்பு துணை காவல் ஆய்வாளர், தலைமை காவலர் தற்காலிகமாக பணி நீக்கம் செய்யப்பட்டுள்ளனர்.
கிருஷ்ணகிரி அருகே இரு தரப்பினர் இடையே ஏற்பட்ட மோதல் வழக்கில், கைது செய்யப்பட்ட நபரை அவருக்கு சொந்தமான காரில் அழைத்து சென்ற சம்பவத்தில் தான் தற்போது, இரண்டு போலீஸ் போலீசார் தற்காலிகமாக பணி நீக்கம் செய்யப்பட்டுள்ளனர்.
ஓசூர் ராம் நகரில் கடந்த எட்டாம் தேதி இரு தரப்பினரடியை மோதல் ஏற்பட்டது. இந்த விவகாரம் தொடர்பாக ராம் நகர் பகுதியில் சேர்ந்த கார்த்தி என்பவரை கடந்த 11ஆம் தேதி போலீசார் கைது செய்தனர்.
கைது செய்த போலீசார் கார்த்திக்கின் சொந்த வாகனத்திலேயே அவரை அழைத்துச் சென்று, நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தினர். பின்னர் அவரின் வாகனத்திலேயே பயன்படுத்தி சிறைச்சாலை வரை கொண்டு சென்றுள்ளனர்.
பொதுவாக குற்றவாளிகளை கைது செய்த பின், போலீசார் காவல்துறைக்கு சொந்தமான வாகனத்தில் அல்லது வாடகை வாகனத்தில் தான் அழைத்துச் செல்ல வேண்டும் என்பது விதி.
ஆனால் மாறாக கைது செய்யப்பட்ட குற்றவாளியின் வாகனத்தையே போலீசார் கைது பயன்படுத்தியது சர்ச்சை ஏற்படுத்தியது. இது குறித்து புகாரின் பேரில் ஓசூர் டவுன் சிறப்பு காவல் துணை ஆய்வாளர் செல்வம், தலைமை காவலர் சரவணன் ஆகியோரை தற்காலிகமாக பணி நீக்கம் செய்து கிருஷ்ணகிரி மாவட்ட எஸ்பி சரோஜ் குமார் உத்தரவு பிறப்பித்துள்ளார்.
முன்னதாக குற்றவாளியை போலீசார் அவரின் வாகனத்திலேயே அழைத்துச் செல்லும் காணொளி வெளியாகி சர்ச்சையை ஏற்படுத்தியது குறிப்பிடத்தக்கது.