தமிழில் பெயர் வைத்தால் மட்டுமே படத்திற்கு கேளிக்கை வரி விலக்கு கோர முடியாது என சென்னை உயர்நீதி மன்றம் அறிவித்துள்ளது .”ஐ ” என் பெயரிடப்பட்ட திரைப்படம் சங்கர் இயக்கியிருந்தார் . இதன் விநியோக உரிமையை ஸ்ரீ விஜயலஷ்மி நிறுவனம் பெற்றிருந்தது . இந்நிலையில் ஐ படத்திற்கு வரி விலக்கு அளிக்க புதுச்சேரி அரசு மறுப்பு தெரிவித்தது .
இதை எதிர்த்து ஸ்ரீ விஜியலஷ்மி பிலிம்ஸ் சென்னை உயர்நீதி மன்றத்தில் வழக்கு தொடர்ந்தது . அதன்படி திரைப்படத்திற்கு தமிழில் ஐ என்று பெயர் வைக்கப்பட்டுள்ளதால் கேளிக்கை வரிவிலக்கு அளிக்க வேண்டும். ஆனால் புதுச்சேரி அரசு மறுப்பதாக தெரிவித்தது. மனுமீதான விசாரணையில் புதுச்சேரி அரசு தரப்பு வழக்கறிஞர் , ஐ என்பது தமிழ் எழுத்து அவ்வளவு தான். ஆனால் தமிழ் வார்த்தை இல்லை .அதற்கு பொருளும் இல்லை. ஐ என்பது ஆங்கில வார்த்தை ஐ அதாவது கண் என பொருள்படும் .
அது எப்படி தமிழ் வார்த்தையாகும். எழுத்து மட்டும் தமிழில் இருந்தால் போதாது என்று கூற, படத் தயாரிப்பு தரப்போ ஐ என்பது வியப்பு மற்றும் மகிழ்ச்சியின் வெளிப்பாடு எனவே கேளிக்கை வரி விலக்கு அளிக்க வேண்டும் என வாதிட்டது.
பெயரில் தமிழ் எழுத்தோ வார்த்தை பயன்படுத்தியதை காரணம் காட்டி வரி விலக்கு சலுகை கோர முடியாது நிபந்தனைகள் பூர்த்தியாயிருக்க வேண்டும் என தெரிவித்து மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிட்டார்.