தமிழ்நாட்டில் புலம் பெயர் தொழிலாளர்கள் தாக்கப்படுவதாக வதந்தி பரப்பிய யூடியூபர் மணீஷ் காஷ்யப் பீகாரில் கைது செய்யப்பட்டுள்ளார். தமிழ்நாட்டில் வடமாநில தொழிலாளர்கள் தாக்கப்படுவதாக கடந்த சில வாரங்களுக்கு முன்பு சமூக வலைத்தளங்களில் தகவல் பரவியது. அண்மையில் கோவை நீதிமன்றம் அருகே இளைஞர் ஒருவர் படுகொலை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பான விடியோவை பதிவிட்டு பீகார் மாநில புலம் பெயர் தொழிலாளர்களை தமிழ்நாட்டைச் சேர்ந்தவர்கள் தாக்குவதாக பீகார் உள்ளிட்ட வடமாநிலங்களில் பரபரப்பு ஏற்பட்டது. இது தொடர்பாக வெளியான வீடியோ குறித்து […]