திடீரென்று பரவிய ஆந்த்ராக்ஸ் அச்சுறுத்தல்… நகரம் ஒன்றை மொத்தமாக மூடிய ரஷ்யா


ரஷ்யாவில் நகரம் ஒன்றில் ஆந்த்ராக்ஸ் அச்சுறுத்தல் இருப்பதை அதிகாரிகள் தரப்பு உறுதி செய்துள்ளதுடன், நோய் பாதிப்புக்குள்ளான காளை ஒன்று இறைச்சியாக விற்கப்பட்டதும் கண்டறியப்பட்டுள்ளது.

அதிகாரிகள் தரப்பு கட்டுப்பாட்டில்

குறித்த சம்பவத்தை தொடர்ந்து அந்த நகரத்தை மொத்தமாக அதிகாரிகள் தரப்பு கட்டுப்பாட்டில் கொண்டுவந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
ரஷ்யாவில் Staroye Aktashevo பகுதியை சேர்ந்த தம்பதி ஒன்று காளை ஒன்றை மாமிசமாக விற்பனை செய்யும் பொருட்டு கொன்றுள்ளனர்.

திடீரென்று பரவிய ஆந்த்ராக்ஸ் அச்சுறுத்தல்... நகரம் ஒன்றை மொத்தமாக மூடிய ரஷ்யா | Deadly Anthrax Outbreak Russian Village Sealed

@Vesti Rossiya

ஆனால் தற்போது அந்த தம்பதியும் ஆந்த்ராக்ஸ் பாதிப்பால் ஆபத்தான நிலையில் மருத்துவமனையில் சேர்ப்பிக்கப்பட்டுள்ளனர்.
மேலும், காளை வெட்டப்படும் போது அவர்களுக்கு ஏற்பட்ட காயம் காரணமாக ஆந்த்ராக்ஸ் பாதிப்பு ஏற்பட்டிருக்கலாம் என கூறப்படுகிறது.

இந்த நிலையில் நகர எல்லைகள் மூடப்பட்டுள்ளதுடன், சோதனை சாவடிகளும் அமைக்கப்பட்டுள்ளது. மேலும், தனிமைப்படுத்துதல் நடவடிக்கையும் முன்னெடுக்கப்பட்டுள்ளது.

பாதிப்பு பரவும் அபாயம்

மட்டுமின்றி, அந்த இறைச்சியானது அடையாளம் தெரியாத வாடிக்கையாளர்கள் பலர் வாங்கிச் சென்றுள்ளதாகவும், அவர்களால் இந்த பாதிப்பு பரவும் அபாயம் இருப்பதாகவும் அதிகாரிகள் எச்சரித்துள்ளனர்.

திடீரென்று பரவிய ஆந்த்ராக்ஸ் அச்சுறுத்தல்... நகரம் ஒன்றை மொத்தமாக மூடிய ரஷ்யா | Deadly Anthrax Outbreak Russian Village Sealed

Image: Social media/e2w

சுமார் 500 கிலோ வரையில் மாமிசம் விற்கப்பட்டுள்ளது. தற்போது இந்த வாடிக்கையாளர்கள் அனைவரும் ஆந்த்ராக்ஸ் பாதிப்பு அச்சுறுத்தலில் உள்ளனர்.
அடையாளம் காணப்பட்ட மக்கள் மட்டும் தற்போது மருத்துவ சிகிச்சையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தெரியவந்துள்ளது.



Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.