கிழக்கு ஆப்பிரிக்க நாடான தெற்கு சூடானில், உள்நாட்டு போரின் போது வீசப்பட்டு வெடிக்காத குண்டுகள், வெடித்து சிதறியதில் 11 சிறுவர்கள் உயிரிழந்தனர்.
தலைநகர் ஜூபாவின் வடமேற்கில் உள்ள தொலைதூர கிராமத்தில் கடந்த வியாழக்கிழமையன்று இந்த விபத்து நிகழ்ந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
சூடானில் இருந்து தெற்கு சூடான் சுதந்திரம் அடைந்த பின், கடந்த 2013ம் ஆண்டு அந்நாட்டில் உள்நாட்டு போர் மூண்டது. 5 ஆண்டுகள் நீட்டித்த போரால் 4 லட்சம் மக்கள் பலியாகினர்.
போரின் போது வீசப்பட்ட கண்ணிவெடிகள் மற்றும் வெடிக்காத குண்டுகளால், அந்நாட்டில் அவ்வப்போது இது போன்ற விபத்துகள் நேரிடுவதாக கூறப்படுகிறது.