முன்னாள் முதல்வர் ஜெயலலிதா மறைவுக்கு பிறகு பாஜக அதிமுகவுடன் இணைந்து பயணித்து வருகிறது. குறிப்பாக கடந்த 2022 சட்டமன்ற தேர்தல் மற்றும் பாஜக அதிமுகவுடன் கூட்டணி வைத்து போட்டியிட்டு நான்கு தொகுதியில் வெற்றி பெற்றது. இந்நிலையில், கடந்த சில நாட்களாகவே பாஜக அதிமுக கூட்டணியில் விரிசல் ஏற்படும் வகையில் பல்வேறு சம்பவம் நடைபெற்றது.
குறிப்பாக தற்போது இரு கட்சி நிர்வாகிகளும் ஒருவருக்கொருவர் மாறி மாறி எதிர் எதிரான கருத்துக்களை தெரிவித்து வருகின்றனர். இது போன்ற சூழ்நிலையில் ”அதிமுகவுடன் கூட்டணி வைக்க மாட்டோம் கூட்டணி வைத்தால் பதவி விலகுவதாக” அண்ணாமலை கூறிய கருத்து தமிழக அரசியலில் பெரும் பரபரப்பு ஏற்படுத்தியுள்ளது.
மேலும், டெல்லி தலைமையின் எச்சரிக்கையையும் மீறி அண்ணாமலை இப்படியான கருத்து தெரிவித்திருப்பது அவரது பதவிக்கு அவராகவே முற்றுப்புள்ளி வைத்துக்கொண்டதாக பார்க்கின்றனர். பாஜக தேசிய தலைவர் ஜெ.பி.நட்டா கடந்த 10 ஆம் தேதி பாஜக அலுவலக திறப்பு விழாவிற்காக கிருஷ்ணகிரிக்கு வருகை தந்தார். அப்போது அவர் பாஜக நிர்வாகிகளை தனியாக சந்தித்து ஆலோசனை நடத்தியுள்ளார்.
jp nadda
அப்போது, அவர் அதிமுகவுடன் சுமூகமாக செல்ல வேண்டும். அதிமுக தொண்டர்களுடன், தலைவர்களுடன் வம்பு வளர்க்க வேண்டாம். அதிமுக தலைமை குறித்து எந்த குறையையும் சொல்லக்கூடாது. இதை தமிழக பாஜக தலைவரும், நிர்வாகிகளும், தொண்டர்களும் கண்டிப்பாக பின்பற்ற வேண்டும் என்று ஜெ.பி. நட்டா எச்சரிக்கை விடுத்தது சென்றுள்ளாராம். இந்த நிலையில் அண்ணாமலை ஒரு படி மேலே சென்று அதிமுகவுடன் கூட்டணியே வேண்டாம் என்று கூறியுள்ளார்.
இதுகுறித்து அதிமுகவினர் கருத்து தெரிவிக்கும் போது அண்ணாமலை கூறியது மகிழ்ச்சியுடன் ஏற்றுக்கொள்வதாக தெரிவித்துள்ளனர். இந்த நிலையில் பதவி விலகுவதாக அண்ணாமலை கூறியது அவரது தனிப்பட்ட கருத்து என நெல்லையில் பாஜக சட்டமன்ற குழு தலைவரும் எம்எல்ஏவுமான நயினார் நாகேந்திரன் தெரிவித்துள்ளார்.
நெல்லை பாளையங்கோட்டையில்நடைபெற்ற அரசு நிகழ்ச்சியில் பங்கேற்ற நயினார் நாகேந்திரன் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில், பாரதிய ஜனதா கட்சியின் கூட்டணி குறித்து அகில இந்திய தலைமை தான் முடிவு எடுக்கும் அதுதான் எங்களது முடிவு அண்ணாமலை தெரிவித்தது அவரது தனிப்பட்ட கருத்தாக உள்ளது. தமிழகத்தில் யாரும் இதுவரை எந்த கட்சியும் தனியாக போட்டியிடவில்லை. திமுக, அதிமுக, பாரதிய ஜனதா கட்சிகள் கூட்டணி அமைத்து தான் போட்டிடுகிறது.
தனியாக யாரும் போட்டியிட முடியாது. இதுவரை தமிழக அரசியல் வரலாற்றில் இதுவரை எப்படி நடந்தது இல்லை. மனதளவில் பாதிக்கப்பட்டால்தான் மருத்துவமனைக்கு தான் செல்ல வேண்டும் எனக்கு மனதளவில் எந்த வித பாதிப்பும் இல்லை. திருநெல்வேலி மாநகராட்சியில் உட்கட்சி பூசல் தொடர்பாக மோதல் நடைபெற்று வருவது அவர்கள் கட்சி விவகாரம். மாநகராட்சி பகுதியில் அவர்கள் பிரச்சனைகளை மறந்து எல்லாப் பணிகளும் நடைபெற வேண்டும் எனவும் அவர் தெரிவித்தார்.