“நரிக்குறவர், குருவிக்காரர்” பழங்குடியினர் சான்றிதழ்; தமிழக அரசு முக்கிய தகவல்

“நரிக்குறவன், குருவிக்காரன்” என்பதை நரிக்குறவர், குருவிக்காரர் பெயர் மாற்றம் செய்து ஒன்றிய அரசு தனது திருத்தப்பட்ட அறிவிக்கை வெளியிடும்போது தமிழ்நாடு அரசும் அதனை திரும்ப வெளியிடும் என்று தமிழக அரசு தெரிவித்துள்ளது.

அதுகுறித்து வெளியான செய்தி குறிப்பில் கூறப்பட்டுள்ளதாவது; நாடோடி பழங்குடியின சமூகத்தினரான நரிக்குறவர், குருவிக்காரர் இனங்களை தமிழ் நாட்டின் பழங்குடியினர் பட்டியலில் சேர்த்தல் தொடர்பான கோரிக்கை நீண்டகாலமாக நிலுவையில் இருந்து வந்ததது. தமிழக முதலமைச்சர், பிரதமரை கேட்டுக் கொண்டதன் விளைவாக தமிழ்நாடு அரசின்

கருத்துருவான “நரிக்குறவன், குருவிக்காரன்” சமூகங்களை மாநிலத்தில் உள்ள பழங்குடியினர் பட்டியலில் 37 வது இனமாக சேர்த்து ஒன்றிய அரசு அரசிதழ் வெளியிட்டது.

அதற்கேற்ப தமிழக அரசும் மேற்காணும் சமூகத்தினர் அனைத்து அரசியலமைப்பு பாதுகாப்பு மற்றும் நலத்திட்டங்களை பெறுவதற்கான தகுதியடைய ஏதுவாக அரசாணை (நிலை) எண்.38, ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத் (சா.மெ.1)துறை, நாள் 17.03.2023 வெளியிட்டுள்ளது. மேலும், தமிழக முதலமைச்சர், பிரதமரை “நரிக்குறவன், குருவிக்காரன்” என அரசிதழில் வெளியிடப்பட்டுள்ளதை “நரிக்குறவர், குருவிக்காரர்” என திருத்தம் வெளியிட கோரியுள்ளார். இதற்கான பணிகளை ஒன்றிய அரசு மேற்கொண்டு வருகின்றது.

இதற்கிடையில், பள்ளிகள் மற்றும் கல்லூரிகளில் வகுப்பு மாணாக்கர் சேர்க்கை விரைவில் தொடங்க உள்ளதால், வரும் கல்வியாண்டிலேயே இப்பிரிவுகளைச் சேர்ந்த அனைவரும் பழங்குடியினர் சான்றிதழ்களை பெற்று பயனடைய வேண்டும் என்பதற்காக, காலதாமதத்தை தவிர்க்கும் பொருட்டு, ஒன்றிய அரசு வெளியிட்டவாறே, தமிழ்நாடு அரசும் இந்த அறிவிக்கையை வெளியிட்டுள்ளது. தமிழ்நாடு அரசு கோரியவாறு பெயர் மாற்றம் செய்து ஒன்றிய அரசு தனது திருத்தப்பட்ட அறிவிக்கை வெளியிடும்போது தமிழ்நாடு அரசும் அதனை திரும்ப வெளியிடும்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.