நிச்சயதார்த்தம் செய்த காதலியுடன் துப்பாக்கி வில்லன் பிரிவா?

துப்பாக்கி படத்தில் விஜய்க்கு வில்லனாக நடித்து தமிழ் ரசிகர்களிடம் வரவேற்பை பெற்றவர் பாலிவுட் நடிகர் வித்யுத் ஜாம்வால். தொடர்ந்து பில்லா-2 படத்தில் அஜித்துடனும் சூர்யாவுக்கு நண்பனாக அஞ்சான் படத்திலும் நடிதிருந்தார். மேலும் பாலிவுட்டில் சோலோ ஹீரோவாகவும் தனது திறமையை நிரூபித்து வருகிறார்.

தற்போது 42 வயதாகும் வித்யுத் ஜாம்வால், பிரபல பேஷன் டிசைனர் நந்திதா மதானி என்பவரை காதலித்து வந்தார்.. இரண்டு ஆண்டுகளுக்கு முன் நந்திதாவுடன் எளிமையான முறையில் மோதிரம் மாற்றி திருமண நிச்சயதார்த்தமும் செய்து கொண்டார் என்றும் சொல்லப்பட்டது.. தாஜ்மஹால் பின்னணியில் இவர்கள் எடுத்துக்கொண்ட புகைப்படங்களும் அப்போது வெளியாகி அதை உறுதிப்படுத்தின. இந்தநிலையில் இவர்கள் இருவரும் தற்போது கருத்து வேறுபாடு காரணமாக பிரிந்துவிட்டார்கள் என ஒரு செய்தி கடந்த சில நாட்களாக ஓடிக்கொண்டு இருக்கிறது.

கடந்த இரண்டு தினங்களுக்கு முன் பாலிவுட் பிரபலம் ஒருவரது வீட்டு திருமண நிகழ்வில் இருவரும் தனித்தனியாக கலந்துகொண்டதும், ஒருவருக்கொருவர் பேசிக்கொள்ளாததும் அதை உறுதிப்படுவது போல இருக்கிறது என்றும் சொல்லப்படுகிறது. விராட் கோலி உள்ளிட்ட பிரபலங்களின் ஹேர்ஸ்டைலிஸ்ட்டாக பணியாற்றும் நந்திதா மதானி ஏற்கனவே தொழிலதிபர் ஒருவரை திருமணம் செய்து பின்னர் அவரிடம் இருந்து விவாகரத்து பெற்றவர் என்பது குறிப்பிடத்தக்கது..

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.