உலகநாயகன் கமல்ஹாசனின் மகளும், பிரபல நடிகையுமான ஸ்ருதிஹாசன் தமிழ் மொழிப்படங்கள் மட்டுமல்லாது தெலுங்கு மற்றும் ஹிந்தி மொழிப்படங்களிலும் பிசியாக இருந்து வருகிறார். தமிழில் இவரது படங்கள் வரவில்லையென்றாலும் மற்ற மொழிகளில் இவரது படங்கள் வெளியாகிக்கொண்டு இருக்கிறது. இவரது நடிப்பில் இந்த ஆண்டின் பொங்கல் பண்டிகை சமயத்தில் இரண்டு படங்கள் வெளியானது. பாலகிருஷ்ணாவுக்கு ஜோடியாக ‘வீர சிம்மா ரெட்டி’ படத்திலும், சிரஞ்சீவிக்கு ஜோடியாக ‘வால்டர் வீரைய்யா’ படத்திலும் நடித்திருந்தார். தற்போது ‘கேஜிஎஃப்‘ புகழ் பிரசாந்த் நீல் இயக்கத்தில் பிரபாஸ் நடிக்கும் ‘சலார்’ படத்தில் ஸ்ருதிஹாசன் நடித்து வருகிறார். யாஷ் நடித்திருந்த ‘கேஜிஎஃப்’ போலவே சலார் படமும் இரண்டு பாகங்களாக வெளியாகவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.
நடிகை ஸ்ருதிஹாசன் எவ்வளவுதான் படங்களில் பிசியாக இருந்தாலும் சமூக வலைத்தளங்களிலும் படு ஆக்டிவாக இருந்து வருகிறார். அடிக்கடி தனது வொர்க்அவுட் வீடியோ போன்ற அன்றாட பல வேலைகளை சமூக வலைத்தளத்தில் அப்டேட் செய்து வருகிறார். கடந்த சில நாட்களுக்கு முன்னர் ஸ்ருதிஹாசன் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில், தனது ரசிகர்களிடம் தன்னிடம் எதாவது வேடிக்கையான கேள்விகளை கேட்குமாறு பதிவிட்டிருந்தார். ஸ்ருதியின் இந்த பதிவை பார்த்த நெட்டிசன்கள் உடனே சரமாரியாக கேள்விகளை அள்ளி வீச தொடங்கினர். ‘Are you an verjain?’ என்று கேட்டிருந்தார், இதனை பார்த்த ஸ்ருதி அந்த நபரை ”virgin’ என்று சரியாக எழுத்துப்பிழையில்லாமல் எழுதுமாறு கேட்டு அந்த நபரை நோஸ்கட் செய்துள்ளார்.
மற்றொரு நெட்டிசன், ஆல்கஹாலை பற்றி கேள்வி எழுப்பினார், அதற்கு பதிலளித்த ஸ்ருதிஹாசன், தான் இப்போது குடிப்பழக்கம் இல்லாமல் இருப்பதாகவும், கடந்த 6 வருடங்களாக அந்த பழக்கம் இல்லாமல் வாழ்ந்து வருவதாக கூறினார். மேலும் நான் ஆல்கஹால் எதையும் தொடுவதில்லை, அது எனக்கு பிடிக்கவில்லை என்றும் வேணுமென்றால் ஆல்கஹால் இல்லாத பீரை தேர்ந்தெடுப்பேன் என்று கூறினார். இதனைத்தொடர்ந்து மற்றொரு நெட்டிசன் அவரிடம் உங்களுடன் டேட் செய்யலாமா என்று கேட்டதற்கு, அவர் சிறிதும் யோசிக்காமல் ‘நோ’ என்று பதிலளித்தார். அதன் பின்னர் தன்னை திருமணம் செய்துகொள்ள வாய்ப்புள்ளதா என்று நெட்டிசன் கேள்வி கேட்டதற்கு, ஸ்ருதி ‘நோ ஏனென்றால்’ என்று சொல்லிவிட்டு கேமராவை திருப்பி தனது காதலன் சந்தனு ஹஸாரிகாவை காண்பித்தார்.