பாஜக – அதிமுக கூட்டணி விவகாரம் தொடர்பாக அண்ணாமலை பேசியது அவரது சொந்த கருத்து என்பதால், அதற்கு விளக்கம் தர முடியாது என பாஜக எம்.எல்.ஏ. நயினார் நாகேந்திரன் தெரிவித்துள்ளார்.
நெல்லை பாளையங்கோட்டையில் பேட்டியளித்த அவர், கூட்டணி தொடர்பாக பாஜகவின் தேசியத் தலைமை தான் இறுதி முடிவு எடுக்கும் என்றார்.
மேலும், தமிழ்நாட்டில் இதுவரை கூட்டணி அமைத்து தான் அனைத்து கட்சிகளும் போட்டியிட்டதாகவும், யாரும் தனியாக போட்டியிட்டது இல்லை என்றும் நயினார் நாகேந்திரன் கூறினார்.