மன்னருடைய முடிசூட்டு விழாவிற்கு வரவேண்டாம்: ஹரி மேகன் தம்பதியரை எச்சரிக்கும் நிபுணர்


இளவரசர் ஹரியும் அவரது மனைவி மேகனும், மன்னர் சார்லசுடைய முடிசூட்டு விழாவிற்கு வராமல் இருப்பதே நல்லது என கூறியுள்ளார் நிபுணர் ஒருவர்.

ஹரி மேகனுக்கு அழைப்பு

மன்னர் சார்லசுடைய முடிசூட்டு விழாவிற்கு அவரது இளைய மகனான இளவரசர் ஹரிக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

ஆனால், ஹரியும் மேகனும் மன்னருடைய முடிசூட்டு விழாவிற்கு வருவார்களா மாட்டார்களா என்பது குறித்து அவர்கள் தரப்பிலிருந்து உறுதியான தகவல் எதுவும் இல்லை.  

மன்னரின் அழைப்பை ஏற்றாலும் பிரச்சினை, ஏற்காவிட்டாலும் பிரச்சினை 

இந்நிலையில், மக்கள் தொடர்பு நிபுணரான Patrick O’Kane என்பவர், ஹரியும் மேகனும், மன்னரின் அழைப்பை ஏற்றாலும் பிரச்சினை, ஏற்காவிட்டாலும் பிரச்சினை என்னும் ஒரு நிலையில் காணப்படுவதாக தெரிவித்துள்ளார். 

மன்னருடைய முடிசூட்டு விழாவில் பங்குகொள்ள ஹரி மேகன் தம்பதியருக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ள நிலையில், அவர்கள் அந்த அழைப்பை ஏற்க மறுத்தால், அது மன்னரை அவமதிப்பதாக கருதப்படும். 

ஆனால், ஹரி மேகனால் ராஜ குடும்பத்துக்கு இவ்வளவு பிரச்சினைகள் ஏற்பட்டுள்ள நிலையில், அவர்கள் முடிசூட்டு விழாவுக்கு வருவார்களானால் மக்களுடைய மற்றும் ஊடகங்களுடைய கவனம் அவர்களை நோக்கித் திரும்பக் கூடும்.

ஆகவே, பிரித்தானிய வரலாற்றில் முக்கியத்துவம் வாய்ந்த நிகழ்ச்சியான மன்னருடைய முடிசூட்டுவிழாவிற்கு வந்து கவனத்தை திருப்புவதைவிட, ஹரியும் மேகனும் விழாவிற்கு வராமல் இருப்பதே நல்லது என்கிறார் Patrick.

மன்னருடைய முடிசூட்டு விழாவிற்கு வரவேண்டாம்: ஹரி மேகன் தம்பதியரை எச்சரிக்கும் நிபுணர் | Harry Meghan Is An Expert Warning The Couple

Image: PA

இதற்கிடையில் இளவரசி டயானாவின் பட்லரான Paul Burrellம், ராணி கமீலாவை மோசமாக விமர்சித்துள்ள ஹரியும் அவரது மனைவியான மேகனும் மன்னருடைய முடிசூட்டு விழாவிற்கு வருவது தொடர்பில் அவர்களை எச்சரித்துள்ளார்.

மன்னரின் அன்பிற்குரிய அவரது மனைவி கமீலாவை மோசமாக விமர்சித்த ஹரியும் மேகனும் இன்னமும் மன்னருடைய கோபத்தை எதிர்கொள்ளவில்லை. ஆகவே, அவர்கள் முடிசூட்டு விழாவிற்கு வருவதற்கு பதில், அமெரிக்காவில் இருந்துவிடுவதே நல்லது என Paul எச்சரித்துள்ளது குறிப்பிடத்தக்கது.
 

மன்னருடைய முடிசூட்டு விழாவிற்கு வரவேண்டாம்: ஹரி மேகன் தம்பதியரை எச்சரிக்கும் நிபுணர் | Harry Meghan Is An Expert Warning The Couple

Image: Getty Images



Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.