மீண்டும் ஃபார்முக்கு திரும்பிய கே.எல் ராகுல்..! உற்சாகத்தில் இந்திய ரசிகர்கள்


அவுஸ்திரேலிய அணிக்கு எதிரான முதல் ஒருநாள் போட்டியில் கே.எல் ராகுல் 75 ஓட்டங்கள் குவித்து மீண்டும்  ஃபார்முக்கு திரும்பி இருப்பது ரசிகர்களை உற்சாகமடைய வைத்துள்ளது.


இந்தியா திரில் வெற்றி

அவுஸ்திரேலிய அணிக்கு எதிரான ஒருநாள் போட்டி மும்பை வான்கடே மைதானத்தில் இன்று நடைபெற்றது.

இதில் முதலில் பேட்டிங் செய்த அவுஸ்திரேலிய அணி, இந்திய பந்துவீச்சாளர்களின் திறனை எதிர்கொள்ள முடியாமல் 35.4 ஓவர்கள் முடிவிலேயே அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 188 ஓட்டங்கள் குவித்தது.

மீண்டும் ஃபார்முக்கு திரும்பிய கே.எல் ராகுல்..! உற்சாகத்தில் இந்திய ரசிகர்கள் | Ind Vs Aus 1St Odi Kl Rahul Back To Form In MumbaiTwitter

இதையடுத்து இரண்டாவது பேட்டிங்கில் களமிறங்கிய இந்திய அணி முதலில் தடுமாறினாலும், பின் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி, 39.5 ஓவர்கள் முடிவில் 191 ஓட்டங்கள் என்ற வெற்றி இலக்கை அடைந்ததுடன் மட்டுமல்லாமல் 5 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றியையும் பதிவு செய்துள்ளது.

ஃபார்முக்கு திரும்பிய கே.எல் ராகுல்

கடந்த சில தொடர்களாக கே.எல் ராகுல் போதுமான ஆட்டத்தை வெளிப்படுத்தாமல் திணறி வந்த நிலையில், அவர் மீது பல்வேறு விமர்சனங்கள் தொடர்ந்து முன்வைக்கப்பட்டு வந்தது.

மீண்டும் ஃபார்முக்கு திரும்பிய கே.எல் ராகுல்..! உற்சாகத்தில் இந்திய ரசிகர்கள் | Ind Vs Aus 1St Odi Kl Rahul Back To Form In MumbaiTwitter

இந்திய அணியின் சில முன்னாள் வீரர்கள் கூட கே.எல் ராகுல் இடத்தை மற்றொரு இளம் வீரர்களுக்கு அமைத்து தரலாம் என்று கருத்து தெரிவித்து வந்தனர்.

இந்நிலையில் அவுஸ்திரேலிய அணிக்கு எதிரான முதல் போட்டியில் டாப் ஆர்டர் இந்திய பேட்ஸ்மேன்கள் சொற்ப ஓட்டங்களில் வெளியேறினாலும், கே.எல் ராகுல் பொறுப்பான மற்றும் நிதானமான ஆட்டத்தை வெளிப்படுத்தி இந்திய அணியை வெற்றி பாதைக்கு அழைத்து சென்றார்.

இந்த போட்டியில் கே.எல் ராகுல் 91 பந்துகளில் 7 பவுண்டரிகள் மற்றும் 1 சிக்ஸர் என விளாசி 75 ஓட்டங்கள் குவித்து அசத்தினார்.

இந்த போட்டியின் மூலம் கே.எல் ராகுல் ஃபார்முக்கு திரும்பி இருப்பது இந்திய அணிக்கு கூடுதல் பலமாக பார்க்கப்படும் நிலையில்,கே.எல் ராகுல் ஃபார்ம் ரசிகர்கள் மத்தியில் உற்சாகத்தை ஏற்படுத்தியுள்ளது.





Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.