மும்பை: அமெரிக்காவில் சிலிக்கான் வேலி மற்றும் பர்ஸ்ட் ரிபப்ளிக் வங்கி திவால் ஆன நிலையில், மும்பையில் நடந்த நிகழ்ச்சியில் ரிசர்வ் வங்கி ஆளுநர் சக்திகாந்த தாஸ் பங்கேற்று பேசுகையில், ‘‘பணவீக்கம் மோசமான நிலையில் இருந்தாலும், இந்தியாவில் உள்நாட்டு நிதி அமைப்புகள் நிலையாக உள்ளன. அமெரிக்காவில் ஒரு வங்கி திவாலாக முக்கிய காரணம், அதன் சொத்துக்களை விட அதிகப்படியான கடன் பொறுப்புகளை கொண்டிருந்தது.
இது நிதி ஸ்திரத்தன்மைக்கு கேடு விளைவிப்பவை. எனவே வங்கிகள் சொத்து, கடன் விவகாரத்தில் ஏற்றத்தாழ்வுகளை கொண்டிருப்பதை தவிர்க்க வேண்டும். தற்போதைய அமெரிக்க வங்கிகளின் நெருக்கடி நிலையானது, தனியார் கிரிப்டோகரன்சிகளின் அபாயங்களை வெளிச்சம் போட்டு காட்டுகிறது’’ என்றார்.