கடந்த 24 மணி நேரத்தில் 800க்கும் மேற்பட்ட நபர்களுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ள நிலையில், இந்தியாவில் தினசரி கோவிட் பாதிப்புகள் கடந்த நான்கு மாதங்களில் அதிகபட்சமாக பதிவாகியுள்ளன. 841 புதிய நோய்த்தொற்றுகளுடன், இப்போது 5,389 பேருக்கு நோய் தொற்று உறுதிசெய்யப்பட்டுள்ளதாக மத்திய சுகாதார அமைச்சக தரவுகள் தெரிவிக்கின்றன.
ஜார்கண்ட் மற்றும் மகாராஷ்டிராவில் தலா ஒரு மரணம் பதிவாகியுள்ளது, கேரளாவில் இரண்டு பேர் உயிரிழந்துள்ளனர். கேரளா, மகாராஷ்டிரா, கர்நாடகா மற்றும் குஜராத் ஆகிய மாநிலங்களில் அதிக எண்ணிக்கையிலான வைரஸ் தொற்றுகள் இருப்பதாக சுகாதரத்துறை அமைச்சகத்தின் தகவல்கள் தெரிவிக்கின்றன.
இந்தியாவின் தினசரி சராசரி புதிய கோவிட் பாதிப்புகள் ஒரு மாதத்தில் ஆறு மடங்கு அதிகரித்து வருகின்றன. ஒரு மாதத்திற்கு முன்பு (பிப்ரவரி 18) சராசரி தினசரி புதிய பாதிப்புகள் 112 ஆக இருந்த நிலையில், தற்போது (மார்ச் 18) இது 626 ஆக அதிகரித்துள்ளது.
கொரோனாவால் பாதிக்ப்பட்டவர்கள் இப்போது மொத்த நோய்த்தொற்றுகளில் 0.01 சதவீதம் ஆகும். தேசிய அளவில் கொரோனாவால் இருந்து 98.80 சதவீதம் பேர் மீண்டுள்ளதாக சுகாதார அமைச்சக இணையதளம் தெரிவித்துள்ளது.
நோயிலிருந்து மீண்டவர்களின் எண்ணிக்கை 4,41,58,161 ஆக உயர்ந்துள்ளது மற்றும் வழக்கு இறப்பு விகிதம் 1.19 சதவீதமாக உள்ளது. அமைச்சகத்தின் இணையதளத்தின்படி, நாடு தழுவிய தடுப்பூசி இயக்கத்தின் கீழ் 220.64 கோடி டோஸ் கோவிட்-19 தடுப்பூசிகள் வழங்கப்பட்டுள்ளன.
வைரஸ் தொற்று திடீரென அதிகரித்து வருவதைக் கட்டுப்படுத்துவதில் கவனம் செலுத்த வேண்டும் என்று ஆறு மாநிலங்களுக்கு மத்திய அரசு கடிதம் எழுதியுள்ளதும் குறிப்பிடதக்கது. மத்திய சுகாதார செயலாளர் கடந்த புதன்கிழமை மகாராஷ்டிரா, குஜராத், தெலுங்கானா, தமிழ்நாடு, கேரளா மற்றும் கர்நாடகா ஆகிய மாநிலங்களுக்கு, பரிசோதனை, சிகிச்சை, கண்காணிப்பு மற்றும் தடுப்பூசி ஆகியவற்றை தீவிரப்படுத்துமாறு கேட்டுக்கொண்டார்.
ஆறு மாநிலங்களுக்கு எழுதிய கடிதத்தில், சுகாதார அமைச்சகம், ஒரு சில மாநிலங்களில் அதிக எண்ணிக்கையில் நோய்த்தொற்று பரவக்கூடிய சாத்தியம் இருப்பதாகவும், தொற்றுநோயைத் தடுக்கவும் கட்டுப்படுத்தவும் ஆபத்து மதிப்பீடு அடிப்படையிலான அணுகுமுறையைப் பின்பற்ற வேண்டிய அவசியம் இருப்பதாகவும் கூறியுள்ளது. தொற்றுநோய்க்கு எதிரான போராட்டத்தில் இதுவரை பெற்ற வெற்றிகளை இழக்காமல் செயல்பட வேண்டும் என்றும் அறிவுறுத்தியது.
ரவுடி ரவிக்கு கும்பிடு போட்ட பிரதமர் மோடி; சீறிய காங்கிரஸ், ரூட்டை மாத்திய கர்நாடக பாஜக!
இந்தநிலையில் இன்று மாநிலங்களுக்கு மத்திய சுகாதரத்துறை கடிதம் எழுதியுள்ளது, இந்த விவகாரத்தின் முக்கியத்துவத்தை அதிகரித்துள்ளது. சில மாநிலங்களில் கோவிட் சோதனை நேர்மறை விகிதங்கள் படிப்படியாக அதிகரித்து வருவதாக சுகாதார செயலாளர் ராஜேஷ் பூஷன் இன்று மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களுக்கு கடிதம் எழுதியிருந்தார். இது ஒரு முக்கியமான பிரச்சினை என்று கூறிய அவர், இது உடனடியாக தீர்க்கப்பட வேண்டும் என்று கூறினார்.