சேலத்தில் ஹெல்மெட் அணியாமல் வந்ததற்கு அபராத தொகையை கட்டினால் தான் வண்டியை தரமுடியும் என்று கூறிய போலீசாரிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்ட இளைஞர் வலுக்கட்டாயமாக காவல்துறை வாகனத்தில் ஏற்றி அழைத்துச் செல்லப்பட்டார்.
அயோத்தியாபட்டணம் சோதனைசாவடியில், அம்மாபேட்டை போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தபோது, மனோகரன் என்பவர் இருசக்கர வாகனத்தில் ஹெல்மெட் அணியாமல் வந்துள்ளார்.
ஆயிரம் ரூபாய் அபராதம் விதிக்கப்பட்ட நிலையில், அவர் தன்னிடம் பணம் இல்லை என்று தெரிவித்தாக கூறப்படுகிறது. பணத்தை கொடுத்துவிட்டு வண்டியை எடுத்து செல்லும்படி போலீசார் கூறியதையடுத்து, வாக்குவாதம் செய்த மனோகரன் காவல்துறையினர் பணம் கேட்டு மிரட்டுவதாக சத்தம் போட்டபடியே சேலம்-சென்னை சாலையில் அமர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டுள்ளார். இதனையடுத்து மனோகரனை போலீசார் விசாரணைக்கு அழைத்து சென்றனர்.