7 ஆவது ஊதியக்குழு, சமீபத்திய புதுப்பிப்பு: மத்திய அரசு, மத்திய அரசு ஊழியர்கள் மற்றும் ஓய்வூதியதாரர்களுக்கு ஒரு பெரிய நல்ல செய்தியை விரைவில் வழங்க உள்ளது. இது குறித்த விவாதம் தீவிரமாக நடந்து வருகிறது. அரசாங்கம் விரைவில் அகவிலைப்படி அதிகரிப்புடன் ஃபிட்மென்ட் பாக்டரையும் அதிகரிக்கப் போகிறது. இது குறித்த கலந்துரையாடல்களும் நடந்து வருகின்றன. இம்முறை அரசு மீண்டும் அகவிலைப்படியை சுமார் 4 சதவீதம்அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகின்றது. இதனால், ஊதியத்தில் பம்பர் அதிகரிப்பு இருக்கும்.
அரசாங்கம் அகவிலைப்படியை 4 சதவிகிதம் உயர்த்தினால், அது அதிகரிக்கும் பணவீக்கத்தை சமாளிக்க ஊழியர்களுக்கு உறுதுணையாக இருக்கும் என நம்பப்படுகின்றது. எனினும், இது தொடர்பான எந்த அறிவிப்பும் இதுவரை அரசாங்கத்தால் அதிகாரப்பூர்வமாக வெளியிடப்படவில்லை. எனினும் இது விரைவில் நடக்கும் என வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
அகவிலைப்படி எவ்வளவு உயர்த்தப்படும்
மத்திய அரசு, ஊழியர்கள் மற்றும் ஓய்வூதியதாரர்களின் அகவிலைப்படியை 4 சதவீதம் உயர்த்தும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதற்குப் பிறகு ஊழியர்களின் அகவிலைபப்டி 42 சதவீதமாக உயரும். தற்போது அகவிலைபப்டி 38 சதவிகிதமாக உள்ளது. அகவிலைபப்டி உயர்வுக்கு பிறகு ஊதியத்தில் பம்பர் உயர்வு இருக்கும். மார்ச் 30 ஆம் தேதிக்குள் அரசாங்கம் இந்த பெரிய அறிவிப்பை வெளியிடக்கூடும் என்று நம்பப்படுகிறது.
அரசாங்கம் ஆண்டுக்கு இரண்டு முறை அகவிலைப்படியில் திருத்தம் செய்கிறது என்பது குறிப்பிடத்தக்கது. இதன் விகிதங்கள் ஜனவரி மற்றும் ஜூலை முதல் செயல்படுத்தப்படுகின்றன. இப்போது அதிகரிக்கும் டிஏ விகிதங்கள் ஜனவரி முதல் பொருந்தும் என்று கருதப்படும். முன்னதாக செப்டம்பரில், DA 4 சதவீதம் உயர்த்தப்பட்டது, அதன் விகிதங்கள் ஜூலை முதல் அமல்படுத்தப்பட்டன. இப்போது உயர்த்தப்பட்ட கட்டணத்தின் பலன் சுமார் ஒரு கோடி ஊழியர்கள் மற்றும் ஓய்வூதியம் பெறுபவர்களுக்கு பயனளிக்கும்.
ஃபிட்மென்ட் காரணியிலும் பம்பர் அதிகரிப்பு இருக்கும்
மத்திய அரசு ஊழியர்கள் மற்றும் ஓய்வூதியதாரர்களின் ஃபிட்மென்ட் ஃபாக்டரையும் மத்திய அரசு விரைவில் உயர்த்தி அறிவிக்கக்கூடும். அரசாங்கம் விரைவில் ஃபிட்மென்ட் ஃபாக்டரை 3.6 சதவீதமாக உயர்த்தலாம் என்று நம்பப்படுகிறது. அதன் பிறகு சம்பளத்தில் கணிசமான அதிகரிப்பு இருக்கும். இதைத் தொடர்ந்து குறைந்தபட்ச அடிப்படை சம்பளம் நேரடியாக ரூ.18,000ல் இருந்து ரூ.26,000 ஆக உயரும் என்று நம்பப்படுகிறது. அதன்படி, சம்பளத்தில் மாதம் ரூ.8000 உயர்வு இருக்கும். இதுமட்டுமின்றி ஆண்டுக்கு 96 ஆயிரம் ரூபாய் பலன் கிடைக்கும்.