தமிழ் சினிமாவில் பிரபல இயக்குனர்களில் ஒருவராக திகழ்பவர் விக்னேஷ் சிவன். இவருக்கு கடந்த வருடம் அஜித்தை இயக்கும் வாய்ப்பு கிடைத்தது. ‘ஏகே 62’ படம் விக்கிக்கு மிகப்பெரிய பிரேக் கிடைக்கும் என எதிர்பார்க்கப்பட்டது. இந்நிலையில் திடீரென இந்தப்படத்தை இயக்கும் வாய்ப்பு விக்கி கைவிட்டு போனது. இதனால் ரசிகர்கள் கடும் அதிர்ச்சியடைந்தனர்.
விக்னேஷ் சிவன் இயக்கத்தில் கடைசியாக ‘காத்து வாக்குல ரெண்டு காதல்’ படம் வெளியானது. விஜய் சேதுபதி ஜோடியாக நயன்தாரா, சமந்தா நடித்த இந்தப்படத்திற்கு அனிருத் இசையமைத்தார். ‘நானும் ரவுடிதான்’ படத்திற்கு பிறகு விக்கி, விஜய் சேதுபதி, நயன்தாரா இணைந்ததால் இந்தப்படத்திற்கு ரசிகர்கள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பு கிளம்பியது. ஆனால் இந்தப்படம் ரசிகர்களின் எதிர்பார்ப்பை முழுவதுமாக பூர்த்தி செய்யவில்லை.
அண்மைச் செய்திகளை உடனடியாக படிக்க கூகுள் நியூஸில் தமிழ் சமயம் இணையதளத்தை பின் தொடரவும்
‘காத்து வாக்குல ரெண்டு காதல்’ படத்தின் ரிலீசுக்கு பின்தான் நயன்தாரா, விக்கி திருமணம் பிரம்மாண்டமாக நடைபெற்றது. கோலிவுட் வட்டாரமே ஆச்சரியப்படும் அளவிற்கு இவர்களின் திருமணம் நடந்து முடிந்தது. திருமணத்திற்கு பின்பு அஜித்தை இயக்கும் ‘ஏகே 62’ பட வாய்ப்பை கைப்பற்றினார் விக்னேஷ் சிவன். லைகா தயாரிப்பில் அனிருத் இசையில் இந்தப்படம் உருவாகவுள்ளதாக அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியானது.
‘துணிவு’ படப்பிடிப்பில் நடந்து கொண்டிருந்த சமயத்தில் ‘ஏகே 62’ பட அறிவிப்பு வெளியானது. ஆனால் திடீரென இந்தப்படத்திற்கு விக்னேஷ் சிவன் உருவாக்கிய கதை அஜித் மற்றும் தயாரிப்பு தரப்பிற்கு பிடிக்காததால் அவர் ‘ஏகே 62’ படத்திலிருந்து விலகியதாக தகவல்கள் வெளியாகின. விக்னேஷ் சிவனுக்கு பதிலாக மகிழ் திருமேனி இந்தப்படத்தை இயக்கவுள்ளதாகவும் கூறப்படுகிறது. இதனால் ரசிகர்கள் கடும் அதிர்ச்சி அடைந்தனர்.
வெர்ஜினா நீங்க.? டேட் போலாமா..?: எக்குத்தப்பான கேள்விகளுக்கு ஸ்ருதிஹாசனின் அதிரடி பதில்.!
இந்நிலையில் ‘ஏகே 62’ படத்தை விக்னேஷ் சிவன் இயக்குவதாக தகவல்கள் வெளியாகி இன்றுடன் ஒரு வருடம் நிறைவடைந்துள்ளது. இதனையடுத்து விக்னேஷ் சிவன் தனது இன்ஸ்டாகிராம் ஸ்டோரியில், ‘நானும் ரவுடிதான்’ பட கண்ணான கண்ணே பாடலின் ‘கிடைச்சத இழக்குறதும், இழந்தது கிடைக்குறதும், அதுக்கு பழகுறதும் நியாயம் தானடி’ என்ற வரிகளை பகிர்ந்து “சில வரிகள் ஆழமான அர்த்தங்கள் கொண்டவை” என்ற பதிவிட்டிள்ளார்.
அவரின் இந்த பதிவு தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. ‘ஏகே 62’ படம் கைவிட்டு போனது குறித்தே விக்னேஷ் சிவன் இந்த பதிவை பகிர்ந்துள்ளதாக கூறப்படுகிறது. விக்னேஷ் சிவன் அடுத்ததாக ‘லவ் டுடே’ பிரபலம் பிரதீப் ரங்கநாதன் நடிப்பில் ஒரு படத்தை இயக்கவுள்ளதாக கூறப்படுகிறது. மேலும் இந்தப்படத்தை உலக நாயகனின் ராஜ்கமல் பிலிம்ஸ் நிறுவனம் தயாரிக்கவுள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளது குறிப்பிடத்தக்கது.
Ponniyin Selvan 2: திரிஷாவிடம் சரணடைந்த கார்த்தி: ரசிகர்களை அதிர்ச்சிக்குள்ளாக்கிய புகைப்படம்.!