AK62: அறிவிப்பு வெளியாகி ஓர் ஆண்டு! சூசகமாய் விக்னேஷ் சிவன் வைத்த அந்த பாடல்!

தமிழ் சினிமாவில் குறிப்பிடத்தக்க சிறப்பான படங்களை கொடுத்து தமிழ் ரசிகர்கள் மத்தியில் பிரபலமாக இருப்பவர் தான் இயக்குனர் விக்னேஷ் சிவன்.  ‘நானும் ரவுடி தான்’ படத்தின் மூலம் தமிழ் சினிமாவின் லேடி சூப்பர் ஸ்டார் நயன்தாராவுடன் காதலில் இருந்தவர் தற்போது அவரை திருமணம் செய்துள்ளார், இவர்களுக்கு இரண்டு ஆண் குழந்தைகளும் உள்ளது.  இயக்குனர் விக்னேஷ் சிவன், நடிகர் அஜித்குமாரை வைத்து புதிய படமொன்றை இயக்கப்போவதாக செய்திகள் வெளியானது.  ஹெச்.வினோத் இயக்கத்தில் அஜித்தின் ‘துணிவு’ படம் வெளியான பிறகு, விக்னேஷ் சிவன்-அஜித் கூட்டணியில் ‘ஏகே 62’ படத்தின் பணிகள் தொடங்கும் என்று அறிவிப்பு வெளியானது.  அதற்கேற்ப விக்னேஷ் சிவனும் தனது சமூக வலைதள பக்கத்தில் ‘ஏகே 62’ என்று குறிப்பிட்டும், அஜித்தின் புகைப்படத்தை கவர் பிக் ஆகவும் வைத்திருந்தார்.

விக்னேஷ் சிவன்-அஜித் கூட்டணியில் உருவாகும் ‘ஏகே 62’ படம் எப்படி இருக்க போகிறதென்று ரசிகர்கள் பலரும் எதிர்பார்த்து காத்துக்கொண்டிருந்த நிலையில் திடீரென்று இந்த படத்திலிருந்து விக்னேஷ் சிவன் விலகினார்.  விக்னேஷ் சிவனின் கதை அஜித்திற்கு பிடிக்காததால், அவர் இந்த திட்டத்திலிருந்து விலகிவிட்டதாக செய்திகள் வெளியானது, அதற்கேற்ப விக்னேஷ் சிவனும் தனது சமூக வலைதள பக்கத்தில் வைக்கப்பட்டிருந்த அஜித்தின் புகைப்படத்தை நீக்கினார்.  தற்போது லைகா புரொடக்ஷன்ஸ் நிறுவனம் தயாரிக்கும் ‘ஏகே 62‘ படத்தை விக்னேஷ் சிவனுக்கு பதிலாக, கலகத் தலைவன் படத்தின் இயக்குனர் மகிழ் திருமேனி இயக்கப்போவதாக செய்திகள் வெளியாகியுள்ளது.

vs

அதன்பின்னர், அவர் தனது சமூக வலைதள பக்கத்தில் அவமானமும், தோல்வியும் நிறைய கற்றுக்கொடுப்பதாகவும், உறுதியோடு அடுத்த படத்திற்கு தயாராகி வருவதாகவும் தனது மனக்குமுறலை தெரிவிக்கும் விதமாக ஒரு ரைட்டப் பதிவிட்டிருந்தார்.  இந்த பதிவு ரசிகர்களால் கவனத்தை பெற்று வந்த நிலையில் தற்போது விக்னேஷ் சிவனின் இன்ஸ்டாகிராம் ஸ்டோரி வைரலாகி வருகிறது.  நானும் ரவுடிதான் படத்தில் இடம்பெற்ற ‘கண்ணான கண்ணே’ பாடலை தனது இன்ஸ்டாகிராம் ஸ்டோரியில் வைத்துள்ளார்.  அதில் குறிப்பாக ‘கெடைச்சத இழக்குறதும், இழந்தது கெடைக்குறதும்’ எனும் வரிகளை வைத்திருக்கிறார்.  ஏகே 62 படத்தை விக்னேஷ் சிவன் இயக்கப்போவதாக அறிவிப்பு வெளியாகி ஒரு வருடம் நிறைவடைந்த நாளில் விக்னேஷ் சிவன் இந்த சோகமான பாடலை வைத்திருப்பது சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.