பாலிவுட் சினிமாவில் முன்னணி நடிகையாக இருப்பவர் கங்கனா ரனாவத். தமிழ் சினிமாவில் ஜெயம் ரவி நடிப்பில் வெளியான ‘தாம்தூம்’ படத்தின் மூலம் அறிமுகமனார். தொடர்ந்து ஏஎல் விஜய் இயக்கத்தில் வெளியான ‘தலைவி’ படத்தில் மறைந்த முன்னாள் முதல்வல் ஜெயலலிதா கதாபாத்திரத்தில் நடித்தார கங்கனா ரனாவத்.
Ajith: ரகசிய கள்ளத்தொடர்பில் அஜித்.. குண்டைத் தூக்கிப்போட்ட பிரபலம்.. கிழித்து தொங்கவிடும் ரசிகர்கள்!
தற்போது பி வாசு இயக்கத்தில் ராகவா லாரன்ஸ் நடிப்பில் உருவாகி வரும் ‘சந்திரமுகி -2’ திரைப்படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார் நடிகை கங்கனா ரனாவத். பாலிவுட் சினிமாவில் அதிக சம்பளம் வாங்கும் நடிகையான கங்கனா ரனாவத், தயாரிப்பாளராகவும் , விநியோகஸ்தராகவும் உள்ளார். இதன்மூலம் பல படங்களையும் தயாரித்து வருகிறார் நடிகை கங்கனா ரனாவத்.
ஏராளமான விருதுகளையும் பெற்றுள்ளார் கங்கனா ரனாவத். அரசியலிலும் தீவிரமாக உள்ள கங்கனா ரனாவத் பாஜகவில் முக்கிய பொறுப்பில் உள்ளார். அவ்வப்போது எதையாவது பேசி சர்ச்சைகளில் சிக்கி வருவதையும் வாடிக்கையாக கொண்டுள்ளார். குறிப்பாக பாலிவுட் பிரபலங்களை மறைமுகமாகவும் நேரடியாகவும் சாடி வருகிறார் கங்கனா ரனாவத்.
Kasthuri: மாடர்ன் டிரெஸில் அசத்தும் கஸ்தூரி… குவியும் லைக்ஸ்!
சமீபத்தில் பாலிவுட் நட்சத்திர ஜோடிகளான ரன்பீர் கபூரும் ஆலியா பட்டும் தன்னை ஸ்பை வைத்து கண்காணிப்பதாகவும் மறைமுகமாக குற்றம்சாட்டினார். இந்நிலையில் மீண்டும் ஒரு சர்ச்சையில் சிக்கியுள்ளார் நடிகை கங்கனா ரனாவத். அதாவது நடிகை கங்கனா ரனாவத் தற்போது மும்பையில் உள்ள தனது வீட்டை பழுது பார்க்கும் வேலையில் ஈடுபட்டுள்ளார்.
Samantha: ‘நான் செஞ்ச பெரிய தப்பே அதுதான்’.. ஓபனா பேசிய சமந்தா?
இது தொடர்பான வீடியோவை கங்கனா ரனாவத் தனது சமூக வலைதள பக்கத்தில் பகிர்ந்திருந்தார். அதில் வீட்டிற்கு வெளியே கங்கனா ரனாவத் வைத்துள்ள அறிவிப்பு பலகை இடம்பெற்றுள்ளது. அதில் “வீட்டிற்குள் அத்துமீறி நுழைந்தால் துப்பாக்கியால் சுடப்படுவீர்கள். அதில் உயிர் பிழைப்பவர்கள் மீண்டும் சுடப்படுவீர்கள்” என்று எழுதப்பட்டுள்ளது. மிரட்டும் வகையில் இந்த அறிவிப்பு பலகையை வைத்துள்ளார் கங்கனா.
Meena: ‘பப்புக்குலாம் கூப்பிடுவாங்க.. தனியா இருந்ததே இல்லை’ போட்டுடைத்த மீனா!
இதனை பார்த்த ரசிகர்கள் இப்படியெல்லாம் அறிவிப்பு பலகை வைப்பது சரியா என விளாசி வருகின்றனர். நடிகை கங்கனா ரனாவத் தற்போது தேஜாஸ், டிக்கு வெட்ஸ் ஷெரு, எமர்ஜென்ஸி ஆகிய பாலிவுட் படங்களில் நடித்து வருகிறார். எமர்ஜென்ஸி திரைப்படம் மறைந்த முன்னாள் பிரதமர் இந்திரா காந்தியின் வாழ்க்கை வரலாற்று படமாக உருவாகி வருகிறது. இதில் இந்திரா காந்தியாக நடித்து வருகிறார் கங்கனா ரனாவத்.