Meena: 'பப்புக்குலாம் கூப்பிடுவாங்க.. தனியா இருந்ததே இல்லை' போட்டுடைத்த மீனா!

தன்னை பப்புக்கு அழைத்தது குறித்தும் தனது இளமை காலம் குறித்தும் மனம் திறந்து பேசியுள்ளார் நடிகை மீனா.

நடிகை மீனாநடிகை மீனா 1990களில் தமிழ் சினிமாவில் உச்ச நடிகையாக வலம் வந்தவர் என்பது அனைவரும் அறிந்ததே. ,குழந்தை நட்சத்திரமாக தொடங்கி தென்னிந்திய சினிமாவில் அனைத்து முன்னணி நடிகர்களுடனும் ஜோடியாக நடித்துள்ளார் மீனா. ஏராளமான விருதுகளையும் குவித்துள்ள மீனா 200க்கும் மேற்பட்ட படங்களில் நடித்துள்ளார்.
​ Samantha: ‘நான் செஞ்ச பெரிய தப்பே அதுதான்’.. ஓபனா பேசிய சமந்தா?​
கணவர் மரணம்ரஜினிகாந்த் மீனா காம்போ எவர்க்ரீன் என இப்போதும் கொண்டாடப்பட்டு வருகிறது. அதிகம் கிசுகிசுக்களில் சிக்காத நடிகையான மீனா சினிமாவில் உச்சத்தில் இருந்த போதே வித்யாசாகர் என்பவரை திருமணம் செய்து கொண்டு செட்டிலானார். மீனாவுக்கும் வித்யா சாகருக்கும் நைனிகா என்ற மகள் உள்ளார். இந்நிலையில் கடந்த ஆண்டு மீனாவின் கணவர் வித்யா சாகர் உடல்நலக் குறைவால் மரணமடைந்தார். ​ Dhanush, Meena: தனுஷ் மீனா குறித்து பச்சையாய் பேசிய பயில்வான் ரங்கநாதன்… கழுவி ஊற்றும் நெட்டிசன்ஸ்!​
நிறைய பாய் ஃபிரண்ட்ஸ்இந்நிலையில் சமீபத்தில் ஊடகம் ஒன்றுக்கு பேட்டியளித்த நடிகை மீனா, தனது இளமைக் காலம் குறித்தும் தனது கணவர் குறித்தும் எமோஷனலாக பேசியுள்ளார். மேலும் ரகசியங்களையும் அந்த பேட்டியில் அம்பலப்படுத்தியுள்ளார் நடிகை மீனா. அதில், இளம் வயதில் தனக்கு நிறைய ஃபாய் ஃபிரண்ட்ஸ் இருந்ததாக கூறியுள்ளார் மீனா. மேலும் அப்போது அது தனக்கு தெரியவில்லை என்றும் இப்போதுதான் அதற்கான அர்த்தமே தெரிய வந்தது என்றும் கூறியுள்ளார் மீனா.
​ அதை நினைத்து நினைத்து வருத்தப்படும் சமந்தா!​
பப்புக்கு கூப்பிடுவாங்க2000ஆம் ஆண்டுக்கு பிறகுதான், சினிமா இன்டஸ்ட்ரியில் எல்லாமே மாறியது என்றும் புதுசு புதுசா நிறைய பேர் வந்தார்கள் என்றும் கூறியுள்ளார். மேலும் க்ளப்பிங், பப்பிங் எல்லாம் அப்போதுதான் ஸ்டார்ட் ஆனது என்றும் அந்த நேரத்தில்‘அவங்க பப்புக்கு போறாங்க, இவங்க பப்புக்கு போறாங்க.. நீங்களும் கலந்துக்கோங்க’ என்று தன்னையும் அழைப்பார்கள் என்றும் தெரிவித்துள்ளார் மீனா.
​ Actress: அட்ஜெஸ்ட்மேண்டுக்கு நோ… 10 ஆயிரம் ரூபாய்க்கு ரூம்முக்கு போய் தர்மசங்கடத்தில் மாட்டிய நடிகை!​
சண்டை போட்டிருக்கேன்ஆனால் தனது அம்மா அல்லாம் கூடவே கூடாது என ஸ்ட்ரிக்ட்டாக சொல்லிவிடுவார்கள் என்றும் அதற்காக அம்மாவிடம் பலமுறை சண்டை போட்டுள்ளதாகவும் தெரிவித்துள்ளார். எத்தனை முறை கேட்டாலும் அம்மா அனுமதி கொடுக்கவே மாட்டார் என்றும் தன்னை நல்ல இடத்தில் திருமணம் செய்து வைக்க வேண்டும், எந்த கெட்டப் பெயரும் வந்துவிடக் கூடாது, தான் நன்றாக செட்டில் ஆக வேண்டும் என்பதில் தனது அம்மா தெளிவாக இருந்ததாக தெரிவித்துள்ளார்.
​ Aishwarya Rajinikanth: தீவிரமாகும் பிரச்சனை.. மகன்களுக்கு ஆர்டர் போட்ட ஐஸ்வர்யா ரஜினிகாந்த்!​
தனியாக இருந்ததே இல்லைமேலும் அப்போதெல்லாம் தான் தனியாக இருந்ததே இல்லை என்றும் தன்னை சுற்றி யாராவது இருந்துக் கொண்டே இருப்பார்கள் என்றும் கூறியுள்ளார் மீனா. ஆனால், இன்று இருக்கும் மீனா அப்படி இல்லை என்றும் இன்று வெளிநாடு கூட, தனியாக சென்று வருவதாகவும் இந்த சுதந்திரத்தையும் தைரியத்தையும் தனக்கு கற்றுக் கொடுத்தது தனது கணவர்தான் என்றும் நடிகை மீனா தெரிவித்துள்ளார். இதுவரை உன் அம்மா சொன்னது சரிதான், இனிமேல் நீ அப்படி இருக்க வேண்டாம் என தனது கணவர் தன்னிடம் கூறியதாகவும் உருக்கமாக தெரிவித்துள்ளார் மீனா.

​ Meena, Dhanush: தனுஷ் கூட மீனாவுக்கு கல்யாணமா? இது அவங்களுக்கு தெரியுமா என விளாசும் ரசிகர்கள்!​
என் கணவர்தான்மேலும் எல்லாவற்றையும் ஒப்புக்கொள்ள கூடாது என்பதையும் பிடிக்கவில்லை என்றால் முடியாது என்று சொல்ல பழகிக் கொள்ள வேண்டும் என்பதையும் தனது கணவர்தான் தனக்கு சொல்லிக் கொடுத்தார் என்றும் நடிகை மீனா தெரிவித்துள்ளார். தன்னுடைய கணவரே தனக்கு அதை சொல்லிக் கொடுக்கும் போது தன் அம்மாவால் அதில் தலையிட முடியவில்லை என்றும் நடிகை மீனா தெரிவித்துள்ளார். தற்போது தனது கணவரை மிகவும் மிஸ் பண்ணுவதாகவும் தெரிவித்துள்ளார் நடிகை மீனா.
​ Robo Shankar: ரோபோ ஷங்கருக்கு என்னாச்சு? போட்டோவை பார்த்து ஷாக்கான ரசிகர்கள்!​
Meena

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.