Parthiban: பார்த்திபனை பழி தீர்க்க இப்படி செய்தாரா 'லவ் டுடே' பிரதீப்.?: வெளியான பரபரப்பு தகவல்.!

அண்மையில் கோலிவுட் சினிமாவையே திரும்பி பார்க்க வைத்த வெற்றி என ‘லவ் டுடே’ பட வெற்றியை கூறலாம். அறிமுக நடிகர் ஒருவரின் படத்திற்கு இந்தளவு வரவேற்பு கிடைத்தது உச்ச நட்த்திரங்களுக்கே ஆச்சரியமாக அமைந்தது. இந்நிலையில் இந்தப்படத்தை இயக்கி நடித்த பிரதீப் ரங்கநாதனுக்கும் தனக்கும் இடையிலான பிரச்சனை குறித்து நடிகரும் இயக்குனருமான பார்த்திபன் வெளிப்படையாக பேசியுள்ளது ரசிகர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

ஜெயம் ரவி நடிப்பில் வெளியான ‘கோமாளி’ படம் மூலம் தமிழ் சினிமாவில் இயக்குனராக அறிமுகமானவர் பிரதீப் ரங்கநாதன். இந்தப்படம் ரசிகர்கள் மத்தியில் அமோக வரவேற்பை பெற்றது. ‘கோமாளி’ படத்தை தொடர்ந்து ‘லவ் டுடே’ படத்தை இயக்கி தானே ஹீரோவாக நடித்தார். பல தயாரிப்பு நிறுவனங்கள் இவரை ஹீரோவாக்க யோசித்தாலும், விடா முயற்சி விஸ்வரூப வெற்றி என பலக்கட்ட போராட்டங்களுக்கு பிறகு ‘லவ் டுடே’ படத்தில் ஹீரோவாகவும் அறிமுகமானார் பிரதீப்.

அண்மைச் செய்திகளை உடனடியாக படிக்க கூகுள் நியூஸில் தமிழ் சமயம் இணையதளத்தை பின் தொடரவும்

இந்தப்படம் பாக்ஸ் ஆபிஸில் 100 கோடி வரை வசூல் சாதனை செய்து பலருக்கும் ஆச்சரியத்தை அளித்தது. இந்தப்படத்தில் ஒரு காட்சியில் ‘நல்லா பேசிட்டு இருந்த நீ ஏன் பார்த்திபன் மாதிரி பேசுற’ என ஒரு வசனம் வரும். பார்த்திபன் மாதிரி புரியாமல் பேசுவதாக கிண்டலாக அந்த காட்சி வைக்கப்பட்டிருக்கும். இதுக்குறித்து ரசிக்ர்க்ளுடனான உரையாடலில் பேசிய பார்த்திபன், இந்த வசனத்தை ஆரம்பத்தில் ரசித்தேன். பிறகுதான் இயக்குனர் என்னை கிண்டல் செய்து இந்த வசனத்தை வைத்துள்ளது புரிந்தது.

Kannai Nambathey: த்ரில்லர் கதையில் ஜெயித்தாரா உதயண்ணா.?: ‘கண்ணை நம்பாதே’ பட விமர்சனம்.!

இதற்கு பின்னால் ஒரு கதை உள்ளது. பிரதீப் இயக்கத்தில் வெளியான ‘கோமாளி’ படத்தின் கதை என்னுடைய உதவியாளரின் கதை போல் இருப்பதாக எழுத்தாளர் சங்கத்தில் பிரச்சனை எழுந்தது. இதில் என்னுடைய உதவியாளருக்கு ஆதரவாக தீர்ப்பும், பத்து லட்ச ரூபாயும் பெற்று தந்தார் கே. பாக்யராஜ். அப்போது என்னுடைய உதவியாளருக்கு ஆதரவாக நானிருந்தேன். அந்த கோபத்தால் ஒரு சிறிய பழிவாங்கலாக இந்த வசனத்தை அவர் வைத்திருக்கலாம் என நான் நினைத்தேன் என்று கூறியுள்ளார்.

மேலும் பிரதீப் ரங்கநாதனின் அபாரமான வளர்சியை நான் மிகவும் ரசிக்கிறேன். அவர் இயக்கத்தில் வெளியான ‘லவ் டுடே’ படத்தை நானே பல மேடைகளில் பாராட்டியுள்ளேன். இன்னும் அவர் உயர வேண்டும் என நான் வாழ்த்துகிறேன். இது என்னுடைய மெச்சூரிட்டி. இதே மெச்சூரிட்டி அவருக்கும் ஒரு நாள் வரும் என தெரிவித்துள்ளார் பார்த்திபன்.

Simbu: ஆண்டவர் படத்துக்கான லுக்கா.? தீயாய் இருக்கே: வெறித்தனம் காட்டும் சிம்பு.!

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.