அட்மிஷனை ரத்து செய்துவிட்டு வேறு பல்கலைக்கழகத்தில் சேர்ந்த மாணவர்கள் செலுத்தியரூ.30 கோடி மீட்பு: யுஜிசி தலைவர் பேட்டி

புதுடெல்லி:  பல்கலைகழகங்களில் படிப்பை பாதியில் விட்டுவிட்டு வேறு பல்கலைக்கழகத்தில் சேர்ந்த மாணவர்கள் செலுத்திய கல்வி கட்டணம் ரூ.30 கோடி மீட்கப்பட்டுள்ளதாக பல்கலைகழக மானிய குழு தலைவர் தெரிவித்தார். பல்கலைகழக மானிய குழுவின்(யுஜிசி) தலைவர்  ஜெகதீஷ்குமார் நேற்று  கூறுகையில்,‘‘ பல்கலைகழகங்களில் படிக்கும் பல மாணவர்கள் பொருளாதாரத்தில் மிகவும் பின்தங்கியவர்கள். சிறப்பான பல்கலைகழகங்களில் சேர்ந்து படிப்பதற்கு அவர்களுக்கு சுதந்திரம் அளிக்கப்பட வேண்டும். ஒரு பல்கலைகழகத்தில் சேர்ந்தவர்கள் பின்னர் விரும்பிய படிப்பில் கிடைத்தால் இன்னொரு பல்கலைக்கழகத்தில் சேருவார்கள். அவர்கள் செலுத்திய கல்வி கட்டணத்தை திருப்பி தர பல்கலைக்கழகங்கள் மறுப்பதாக மாணவர்களிடம் இருந்து ஏராளமான புகார்கள்  வருகின்றன.  இதுகுறித்து  சம்மந்தப்பட்ட பல்கலைகழகங்களிடம் பேசி  மாணவர்களின் பணத்தை திரும்ப கொடுக்குமாறு கூறி வருகிறோம்.  

யுஜிசி விதிகளின்படி மாணவர்களின் பணத்தை சில பல்கலைகள் திரும்ப கொடுக்கின்றன. ஆனால், சில சம்பவங்களில், இந்த விவகாரத்தில் யுஜிசி தலையைிட வேண்டி உள்ளது. அட்மிஷனை ரத்து செய்து விட்டு வேறு பல்கலைகழகங்களுக்கு   செல்லும் மாணவர்களுக்கு  முழு கட்டணத்தை திரும்ப கொடுக்க வேண்டும் என யுஜிசி உத்தரவிட்டது.  கடந்த ஆண்டு அக்டோபர் 31ம் தேதி வரை இந்த உத்தரவு இருந்தது. அதன் பிறகு டிச.2022 வரை இதில்,செயல்முறை கட்டணமாக ரூ.1000 ஐ எடுத்து கொண்டு மீதி தொகை தர வேண்டும் என உத்தரவிடப்பட்டது.  ஆனால், இவ்வாறு செலுத்திய  கட்டணத்தை திருப்பி தருவதில்லை என ஒன்றிய, மாநில மற்றும் நிகர்நிலை பல்கலைகழங்கள் மீது மாணவர்கள் தொடர்ந்து புகார் அளிக்கின்றனர். இதில், அனைத்து பல்கலைகழகங்களுக்கும் முன்மாதிரியாக உள்ள டெல்லி பல்கலை 13,611 மாணவர்களிடம் இருந்து பெற்ற ரூ.16 கோடியை திரும்ப கொடுத்துள்ளது. 2022-23 கல்வியாண்டில் 14,443 மாணவர்களிடம் இருந்து பல்கலைகள்  வாங்கிய   ரூ.29.10 கோடியை    யுஜிசி மீட்டுள்ளது’’ என்றார்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.