அதிமுகவில்
தரப்பு பொதுச் செயலாளர் தேர்தலை நடத்த தீவிரம் காட்டி வருகிறது. இதுதொடர்பான அறிவிப்பில் வேட்புமனு தாக்கல் மார்ச் 18, 19 ஆகிய நாட்களில் நடைபெறும். வாக்குப்பதிவு மார்ச் 26, வாக்கு எண்ணிக்கை மார்ச் 27ல் நடக்கும் என்று தெரிவிக்கப்பட்டது. இதனை எதிர்த்து
தரப்பில் தொடரப்பட்ட வழக்கை சென்னை உயர் நீதிமன்றம் இன்று விசாரித்தது.
ஓபிஎஸ் தரப்பு வாதம்
ஓபிஎஸ் தரப்பில் மனோஜ் பாண்டியன், வைத்திலிங்கம், ஜே.சி.டி பிரபாகர் ஆகியோர் தங்கள் வாதத்தை முன்வைத்தனர். அதில், நிரந்தர பொதுச் செயலாளர் ஜெயலலிதா தான் என அறிவித்திருந்தனர். இந்த சூழலில் பொதுச் செயலாளர் தேர்தலை அறிவித்துள்ளனர். கட்சியின் இடைக்கால பொதுச் செயலாளர் என யாரையும் தேர்தல் ஆணையம் இதுவரை அங்கீகரிக்கவில்லை. ஏனெனில் ஒருங்கிணைப்பாளர் பதவிகள் இன்னும் கலைக்கப்படவில்லை.
எடப்பாடி தரப்பு
அதுமட்டுமின்றி பொதுச் செயலாளர் தேர்தலில் ஜனநாயக விதிமுறைகள் மீறப்பட்டுள்ளன. இடைக்கால உத்தரவு பிறப்பிக்கவில்லை என்றால் பிரதான வழக்கே செல்லாதாகி விடும் என்று வாதிட்டனர். இதையடுத்து எடப்பாடி தரப்பில், பொதுக்குழு தீர்மானங்களை எதிர்த்து தொடர்ந்த வழக்கு நிலுவையில் உள்ளதை சுட்டிக் காட்டி பொதுச் செயலாளர் தேர்தலுக்கு தடை கோர முடியாது.
அதிமுக பொதுச் செயலாளர் தேர்தல்
கட்சிக்கு பொதுச் செயலாளர் தேர்வு செய்யப்பட்டால் தான் கட்சியின் பிரச்சினைகளை கையாள முடியும். ஓபிஎஸ் தரப்பினர் வழக்கு தொடர எந்த அடிப்படை முகாந்திரமும் இல்லை என வாதிட்டனர். முன்னதாக ஜூலை 11, 2022 பொதுக்குழு தீர்மானங்களை எதிர்த்த வழக்கு ஒத்திவைக்கப்பட்ட நிலையில், பொதுச் செயலாளர் தேர்தல் அறிவிக்க வேண்டிய அவசியம் என்ன? என்று நீதிபதி கேள்வி எழுப்பினார்.
பொதுக்குழு தீர்மானங்கள் வழக்கு
அதற்கு, கட்சி தொடர்ந்து செயல்பட வேண்டும், வழக்குகளுக்காக காத்திருக்க முடியாது. மக்களவை தேர்தல் நெருங்குகிறது என்று எடப்பாடி தரப்பு பதிலளித்தது. மேலும் பொதுக்குழு தீர்மானங்களை எதிர்த்த வழக்குகளை ஏப்ரல் 11க்கு முன்பு விசாரிக்கலாமா? என நீதிபதி கேள்வி எழுப்பினார். அதுமட்டுமின்றி பொதுச் செயலாளர் தேர்தலை நிறுத்த விரும்பவில்லை என்றும், முடிவுகளை அறிவிக்காமல் இருக்கலாமே என்றும் தெரிவித்தார்.
மார்ச் 22ஆம் தேதி விசாரணை
ஆனால் பொதுக்குழு தீர்மானங்கள் குறித்த வழக்கு முடியும் வரை, பொதுச் செயலாளர் தேர்தல் முடிவை நிறுத்தி வைக்கலாம் என்ற நீதிபதியின் யோசனைக்கு எடப்பாடி தரப்பு எதிர்ப்பு தெரிவித்தது. ஆனால் நீதிபதி விடவில்லை. பொதுச் செயலாளர் தேர்தல் நடைமுறைகள் தொடரலாம். ஆனால் முடிவுகளை அறிவிக்க வேண்டாம். பொதுக்குழு தீர்மானங்கள் குறித்த பிரதான வழக்கு ஏப்ரல் 11ஆம் தேதிக்கு பதிலாக மார்ச் 22ல் விசாரணை நடத்தப்படும்.
தீர்ப்பு உறுதி
அன்றைய தினம் தெலுங்கு வருடப் பிறப்பை ஒட்டி அரசு விடுமுறை ஆகும். இருப்பினும் தலைமை நீதிபதியின் அனுமதியை பெற்று விசாரணை நடத்துகிறோம். இதையடுத்து வரும் 24ஆம் தேதி தீர்ப்பு வழங்குவதாக நீதிபதி குறிப்பிட்டார். இதனால் கடந்த ஆண்டு நடைபெற்ற அதிமுக பொதுக்குழுவில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் தொடர்பான வழக்கிலும் தீர்வு காணப்படும் சூழல் வந்துள்ளது. இதன் தொடர்ச்சியாகவே பொதுச் செயலாளர் தேர்தல் நடத்தப்படுமா? இல்லையா? என்பது தெரியவரும்.