சென்னையில் உள்ள வானகரத்தில் சக்தி நகரை சேர்ந்த ரகுராம் என்பவர் அரும்பாக்கத்தில் உள்ள ஒரு தனியார் நிறுவனத்தில் பணிபுரிந்து வருகிறார். இந்த நிலையில், ரகுராமின் செல்போனுக்கு ‘ஆன்லைன் கோல்டு டிரேடிஸ்’ என்ற பெயரில் குறிப்பிட்ட செல்போன் எண்ணில் இருந்து குறுஞ்செய்தி வந்துள்ளது.
அந்த குறுஞ்செய்தியில் குஜராத்தில் உள்ள எஸ்.வங்கியின் வங்கி கணக்கு குறிப்பிடப்பட்டிருந்தது. அதன் பின்னர் ரகுராமின் வங்கி கணக்கில் இருந்து ரூ.5 லட்சம் பணத்தை நூதன முறையில் எடுத்துள்ளனர்.
இதுதெடார்பாக ரகுராம் போலீசில் புகார் அளித்துள்ளார். அந்த புகாரின் படி, போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகிறார்கள். இதற்கிடையே போலீசார் ஆன்லைன் மோசடி தொடர்பாக பல்வேறு விழிப்புணர்வு பிரசாரங்களை மேற்கொள்கின்றனர்.
இருந்த போதிலும் பலர் ஆன்லைன் வியாபாரத்தை நம்பி ஏமாந்து கொண்டே இருக்கின்றனர். அந்த வகையில் தான் சென்னை வாலிபர் ரூ.5 லட்சம் பணத்தை இழந்து தவித்துள்ளார்.