தமிழ்நாட்டில் திராவிடமும், தமிழ் தேசியமும் எதிரிகள் அல்ல என்றும் ஒன்றையொன்று யார் பெருசு என்று உரசிக்கொள்கின்றனர் என்றும் அரசியலை உற்று நோக்குபவர்கள் கூறுகின்றனர். ஆனால்,
கட்சியும், திமுகவும் நேரெதிர் அரசியல் களமாற்றி வருவதை பார்க்க முடிகிறது.
எந்த தேர்தல் வந்தாலும் திமுக – அதிமுகவை கடுமையாக விமர்சித்து பிரச்சாரம் செய்து வருகிறது நாம் தமிழர் கட்சி. இந்த நிலையில், நாம் தமிழர் கட்சி பாஜகவின் பி டீம் என்று திமுகவினர் விமர்சித்து வருவதும் உண்டு. அதற்கு நாம் தமிழர் சீமான் பலமுறை எதிர்வினையாற்றியுள்ளார். இந்த நிலையில், நாம் தமிழர் கட்சியின் காளியம்மாள் பாஜகவை சேர்ந்த அலிஷா அப்துல்லாவுடன் உணவருந்தும் புகைப்படத்தை திமுகவினர் ஷேர் செய்து விமர்சித்துள்ளனர்.
நாம் தமிழர் கட்சி பாஜகவுடன் சுமூக உறவை வைத்திருப்பதாகவும் மேடையில்தான் சீமான் ஆவேசமாக பேசுவதாகவும் கமெண்ட் செய்து வருகின்றனர். அதற்கு எதிர்வினையாற்றும் நாம் தமிழர் கட்சியினர் திமுக எம்பி கனிமொழி வானதி சீனிவாசனுடன் இருக்கும் புகைப்படத்தை பதிவிட்டு கேள்வி எழுப்புகின்றனர்.
பொது நிகழ்ச்சிகளில் அரசியல் தலைவர்கள் நலம் விசாரித்துக்கொள்வதையும், சாதாரணமாக பேசிக்கொள்வதை கூட கொள்கைக்கு துரோகம் செய்வதை போல சோசியல் மீடியாவில் கிளப்பி விடுகின்றனர். நாம் தமிழர் காளியம்மாள் ”wonder woman” நிகழ்ச்சியில் கலந்துகொண்டார். அவருக்கு விருதும் கொடுக்கப்பட்டது. அதில் பங்கேற்ற பாஜகவின் பெண் நிர்வாகி அலிஷா அப்துல்லாவுடன் அவர் இணைந்து உணவருந்திய புகைப்படத்தைதான் இப்படி பரப்பி வருகின்றனர்.
ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் திமுக கொடுத்து வரும் இலவச பொருட்களோடு வட்டமேசை நிகழ்ச்சியில் கலந்துகொண்ட காளியம்மாள் பேச்சு பட்டாசாக வெடித்தது. அதில் இருந்து காளியம்மாளை விமர்சித்து வருகின்றனர். அப்போது பேசிய காளியம்மாள், ‘வாழவே முடியாத அளவுக்கு 500 க்கும் 1000 க்கும் கையேந்த வைத்ததுதான் திராவிட மாடல். வடக்கர், ஆரியத்தை எதிர்த்து தண்டவாளத்தில் தலை வைத்தவர் கலைஞர். அனால் இன்று வடக்கர்களை பற்றி திமுக ஏன் பேசவே இல்லை… பல்லாயிரம் பேர் ரயிலில் வந்து இறங்கிக்கொண்டிருக்கின்றனர் ஏன் அவர்களது தடை விதிக்கவில்லை? இந்தி எதிர்ப்பு என்று சொல்லி ஆட்சி அதிகாரத்தில் திமுக அமர்ந்ததை போல, இந்திக்காரர்களை எதிர்த்து நாம் தமிழர் கட்சி ஆட்சி அதிகாரத்தில் அமரும்” என்று கூறினார்.