இந்தோனேசியாவின் மெராபி எரிமலை மீண்டும் வெடித்துச் சிதற தொடங்கி உள்ளது.
கடல் மட்டத்தில் இருந்து 9,721 அடி உயரத்தில் உள்ள இந்த எரிமலை நேற்று வெடித்து வெடித்து சிதறியதில் அடர் சாம்பலுடன் நெருப்பு குழம்பு வெளியேறியது.
எரிமலையிலிருந்து வெளிவரும் சாம்பல் அருகில் உள்ள கிராமங்களை மூழ்கடிக்கும் என்றும், எரிமலையை சுற்றி 7 கிலோமீட்டர் வரை யாரும் செல்ல வேண்டாம் என்றும் அந்நாட்டு அரசு அறிவுறுத்தியுள்ளது.