பரிசுப்பொருள் முறைகேடு வழக்கில் பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் இம்ரான் கானுக்கு எதிரான கைது வாரண்டை அந்நாட்டு நீதிமன்றம் ரத்து செய்துள்ளது.
பிரதமராக இருந்தபோது தனக்கு வந்த பரிசுப் பொருட்களை முறைகேடாக விற்பனை செய்தது தொடர்பான வழக்கில், விசாரணைக்கு ஆஜராகாமல் இருந்து வந்த இம்ரான் கானை கைது செய்ய, ஜாமீன் பெறமுடியாத வகையில் வாரண்ட் பிறப்பிக்கப்பட்டது.
இந்த நிலையில் வழக்கு விசாரணைக்காக இம்ரான் கான் வெளியில் சென்றிருந்தபோது அவரது வீட்டின் முன்பிருந்த பேரிகார்டுகளை உடைத்து போலீசார் உள்ளே நுழைய முயன்றனர்.
அப்போது, இம்ரான் ஆதரவாளர்களுக்கும், போலீசாருக்கும் இடையே மோதல் ஏற்பட்டது. தொடர்ந்து, இஸ்லாமாபாத் நீதிமன்றத்தில் நேற்று இம்ரான்கான் நேரில் ஆஜரானார்.
அப்போது, சட்டம்-ஒழுங்கை சுட்டிக் காட்டி, கானுக்கு எதிராக பிறப்பிக்கப்பட்ட கைது வாரண்டுகளை ரத்துசெய்து, வழக்கு விசாரணை மார்ச் 30ம் தேதிக்கு நீதிபதிகள் ஒத்திவைத்தனர்.