குயிடோ:தென் அமெரிக்க நாடான ஈக்வடாரில் ஏற்பட்ட சக்தி வாய்ந்த நிலநடுக்கத்துக்கு இதுவரை 13 பேர் பலியாகி உள்ளனர்.
இதுகுறித்து ஊடகங்கள் தரப்பில்,” ஈக்வடாரில் இன்று சக்தி வாய்ந்த நில நடுக்கம் ஏற்பட்டது. இந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவுகோலில் 6.8 ஆக பதிவாகியது. இதன் ஆழம் 66.4 கிமீ. நில நடுக்கத்தினால் இதுவரை 14 பேர் உயிரிழந்துள்ளனர். 150க்கும் அதிகமானவர்கள் காயமடைந்துள்ளனர். மருத்துவமனைகள், கல்வி கூடங்கள் என பல கட்டிடங்கள் பாதிக்கப்பட்டுள்ளன” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
மிட்புப் பணிகள் தொடர்ந்து நடந்து வருகிறது என இக்வேடார் தேசிய பேரிடர் மேலாண்மை தெரிவித்துள்ளது.
WATCH: Earthquake causes major damage at beer warehouse in Ecuador pic.twitter.com/3NJGWiHlz0
— BNO News Live (@BNODesk) March 18, 2023
Ecuador after 6.9M earthquake pic.twitter.com/VBLg0TZuUH
— God Trumps Satan (@BridgeRubicon) March 19, 2023
2016 ஆம் ஆண்டு ஈக்வடாரில் ஏற்பட்ட சக்திவாய்ந்த நிலநடுக்கத்துக்கு 350 பேர் பலியாகினர். 2500-க்கும் மேற்பட்டோர் படுகாயம் அடைந்தனர் என்பது நினைவுகூரத்தக்கது.