உத்தரபிரதேசம்: இந்தியாவின் உத்தரப் பிரதேசத்தில் உருளைக்கிழங்கு மூட்டைகள் அடுக்கிவைக்கப்பட்டிருந்த கிடங்கின் கூரைப்பகுதி இடிந்துவிழுந்தில் 14 பேர் உயிரிழந்தனர். சம்பவம் சந்தௌசி (Chandausi) எனும் பகுதியில் கடந்த வியாழக்கிழமை (16 மார்ச்) நடந்ததாக Bernama கூறுகிறது. இடிபாடுகளிலிருந்து 10 பேர் மீட்கப்பட்டனர். இந்த விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தாருக்கும் காயமடைந்தவர்களுக்கும் உத்தரப் பிரதேச அரசு இழப்பீட்டுத்தொகை அறிவித்துள்ளது. மேலும் இந்த சம்பவம் தொடர்பாக வழக்குப்பதிவு செய்யப்பட்டு விசாரிக்கப்படுகிறது. பாதிக்கப்பட்டவர்களின் குடும்பங்களுக்குப் பிரதமர் நரேந்திர மோடி அனுதாபம் தெரிவித்துள்ளார்.