புதுக்கோட்டை மாவட்டம் ஆலங்குடி அருகே தனக்கு கிடைக்காத காதலி யாரையும் திருமணம் செய்யக்கூடாது என்று பெண்ணின் கழுத்தை அறுத்து கொலை செய்த இளைஞர் தானும் துக்கிட்டு உயிரை மாய்த்துக் கொண்டார். உறவுமுறை தெரியாமல் காதலில் விழுந்ததால் நிகழ்ந்த விபரீதம் குறித்து விவரிக்கின்றது இந்த செய்தி..
உறவு முறை தெரியாமல் காதலில் விழுந்த இருவரால் உறவுகள் எல்லாம் சேர்ந்து ஒப்பாரி வைத்து கதறி அழும் இந்த விபரீத சம்பவம் அரங்கேறிய இடம்(( spl gfx in))புதுக்கோட்டை மாவட்டம் ஆலங்குடி அருகே உள்ள மயிலாடி காடு..!
இங்கு கட்டுமான வேலை செய்து வந்த 35 வயதான துரைக்கண்ணுவும் எதிர் வீட்டில் வசிக்கும் 20 வயதான பவித்ரா என்ற பெண்ணும் காதலித்து வந்துள்ளனர். இருவருக்கும் 15 வயது வித்தியாசம் என்ற நிலையில்
காதலன் துரைக்கண்ணு பவித்ராவுக்கு பங்காளி முறை என்று அண்மையில் தெரியவந்துள்ளது. தங்களின் முறை தவறிய காதல் திருமணத்தில் சேராது என்று கருதி துரைக்கண்ணுவுடன் பேசுவதை பவித்ரா நிறுத்திக் கொண்டார். இதனால் பவித்ரா மீது துரைக்கண்ணு கடுமையான ஆத்திரத்தில் இருந்ததாக கூறப்படுகின்றது.
இதற்கிடையே அம்மை நோய் தாக்கியதால் பவித்ரா வீட்டில் தனிமைப்படுத்தப்பட்டு இருந்தார். சம்பவத்தன்று பவித்ராவின் பெற்றோர் வீட்டில் யாரும் இல்லை என்பதை அறிந்த துரைக்கண்ணு நேரம் பார்த்து வீட்டுக்குள் நுழைந்து பவித்ராவை கழுத்து அறுத்து கொலை செய்துள்ளான்.
தனது வீட்டிற்கு திரும்பிய துரைக்கண்ணு காதலியை கொலை செய்த வேகத்தில், தானும் தூக்கில் தொங்கி உயிரை மாய்த்துக் கொண்டதாக கூறப்படுகின்றது.
ஆலங்குடி டிஎஸ்பி தீபக் ரஜினி தலைமையிலான போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து பவித்ராவின் உடலை கைப்பற்றி பிணக்கூறாய்வுக்காக புதுக்கோட்டை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கும், துரைக்கண்ணுவின் சடலத்தை அறந்தாங்கி அரசு மருத்துவமனைக்கும் அனுப்பி வைத்தார்.
பங்காளி முறை உடைய பெண்ணாக இருந்தாலும் தனக்கு கிடைக்காவிட்டால் யாருக்கும் கிடைக்கக்கூடாது என்ற விபரீத எண்ணத்தில் துரை கண்ணு இந்த விபரீத செயலை செய்ததாக உறவினர்கள் ஆதங்கத்துடன் தெரிவித்தனர்