இந்தியாவின் லடாக் மற்றும் மயூர்பஞ்ச் பகுதிகளை உலகின் சிறந்த பகுதிகளாக டைம்ஸ் ஆங்கில வார இதழ் தேர்ந்தெடுத்துள்ளது.
அமெரிக்காவிலிருந்து வெளிவரும் டைம்ஸ் இதழ் 2023ம் ஆண்டிற்கான உலகின் சிறந்த 50 சுற்றுலாதளங்களின் பட்டியலை வெளியிட்டுள்ளது.
அதில், வியக்க வைக்கும் உயரமான அழகிய மலைப்பகுதிகளை கொண்டுள்ள லடாக் திபெத்திய புத்த கலாசாரத்துடன் பல்வேறு அதிசயங்களையும் கொண்டுள்ளது என்று டைம்ஸ் தெரிவித்துள்ளது.
ஒடிசாவிலுள்ள மயூர்பஞ்ச் பகுதி அதன் பசுமையான நிலப்பரப்பு, வளமான கலாச்சார மரபு மற்றும் பழங்கால கோயில்களுக்கு பெயர் பெற்றுள்ளதோடு, புகழ்பெற்ற சிமிலிபால் தேசிய பூங்காவில் அரிதான கரும்புலியை மயூர்பஞ்ச்சில் காணலாம் என்று டைம்ஸ் தெரிவித்துள்ளது.