”உலக கோப்பையை விட ஐபிஎல் வெல்வது கடினம்” டி20 நட்சத்திரம் கிறிஸ் கெய்ல் கருத்து!


உலக கோப்பை இறுதிப் போட்டியை விட ஐபிஎல் இறுதிப் போட்டியை வெல்வது மிகவும் கடினமானது என முன்னாள் மேற்கிந்தியத் தீவுகள் அணி வீரர் கிறிஸ் கெய்ல் தெரிவித்துள்ளார்.

உலக கோப்பையா? ஐபிஎல் போட்டியா?

சமீபத்தில் இந்திய கிரிக்கெட் வீரர் ராபின் உத்தப்பா உடன் நடைபெற்ற நேர்காணல் பேட்டியின் போது, டி20 உலக கோப்பை இறுதிப் போட்டி கடினமானதா? அல்லது ஐபிஎல் இறுதிப்போட்டி கடினமானதா? என்று கேள்வி  உலகின் ஆல் டைம் சிறந்த டி20 பேட்ஸ்மேன் என்று போற்றப்படும் மேற்கிந்தியத் தீவுகள் அணி வீரர் கிறிஸ் கெய்லிடம் கேட்கப்பட்டது.

உத்தப்பா ODI உலக கோப்பை போட்டியை குறிப்பிடுகிறார் என்று எண்ணிய யுனிவர்ஸ் பாஸ் கிறிஸ் கெய்ல், முதலில் ஐபிஎல்-ஐ விட உலக கோப்பை இறுதிப் போட்டி கடினமானது என தெரிவித்தார்.

மேலும் ”உங்களுக்கு தெரியும், இதுவரை நான் உலக கோப்பை இறுதிப்போட்டிக்கு சென்றதே இல்லை, எனவே உலகக் கோப்பை என்றே கூறுவேன்” என குறிப்பிட்டார்.

ஆனால், ராபின் உத்தப்பா ”நீங்கள் இரண்டு டி20 உலக கோப்பையை வென்று இருக்கிறீர்கள், நான் எனது கேள்வியில் டி20 உலக கோப்பையை குறிப்பிடுவதாக தெளிவுபடுத்திய போது, கிறிஸ் கெய்ல் தனது முடிவை உடனடியாக மாற்றிக் கொண்டார்.

ராபின் உத்தப்பா கேள்வியை தெளிவு படுத்திய பிறகு மீண்டும் பதிலளித்த கெய்ல், அப்படியானால் நான் ஐபிஎல் என்று நினைக்கிறேன், ஐபிஎல் வெல்வது மிகவும் கடினமானது என குறிப்பிட்டார்.

”உலக கோப்பையை விட ஐபிஎல் வெல்வது கடினம்” டி20 நட்சத்திரம் கிறிஸ் கெய்ல் கருத்து! | Ipl Or T20 World Cup Chris Gayle Reveals VideoAFP


ஆல் டைம் சிறந்த டி20 பேட்ஸ்மேன்

 கிறிஸ் கெய்ல் மேற்கிந்திய தீவுகள் அணிக்காக இதுவரை 79 டி20 போட்டிகளிலும் ஐபிஎல்-லில் 142 போட்டிகளிலும் விளையாடியுள்ளார்.

மொத்தமாக 463 போட்டிகளில் விளையாடியுள்ள கிறிஸ் கெய்ல்  144.75 ஸ்டிரைக் ரேட்டுடன் 14,562 ஓட்டங்கள் குவித்து 36.22 சாரசரியை கொண்டுள்ளார். 

”உலக கோப்பையை விட ஐபிஎல் வெல்வது கடினம்” டி20 நட்சத்திரம் கிறிஸ் கெய்ல் கருத்து! | Ipl Or T20 World Cup Chris Gayle Reveals Video



Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.