எல்லை தாண்டி மீன்பிடித்ததாக இலங்கை மீனவர்கள் 6 பேரை இந்திய கடலோர காவல் படை கைது செய்துள்ளது.
இந்திய கடல் எல்லையில் மீன்பிடித்தாலும் தமிழக மீனவர்கள் எல்லைத் தாண்டி மீன்பிடித்ததாக கூறி இலங்கை கடற்படையினர் அவ்வப்போது கைது செய்து வருகின்றனர். இந்த பிரச்சனை காலம் காலமாக தொடர்ந்தாலும் கூட இன்னும் முழுமையாக தீர்வு காணப்படவில்லை.
இந்த நிலையில் தூத்துக்குடி அருகே மீன் பிடித்துக் கொண்டிருந்த இலங்கை மீனவர்கள் 6 பேரை இந்திய கடலோர காவல் படையினர் கைது செய்தனர். மேலும் அவர்களிடமிருந்து படகுகளையும் பறிமுதல் செய்துள்ளனர்.
முன்னதாக மீனவர்கள் பிரச்சனைக்கு ஏப்ரல் மாதம் இருநாட்டு மீனவ பிரதிநிதிகள் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டு சுமுக தேர்வு விரைவில் கிடைக்கும் என மத்திய இணை அமைச்சர் எம் முருகன் தெரிவித்திருந்தார் என்பதை குறிப்பிடத்தக்கது.