சென்னை: ஒன்றிய தகவல், ஒலிபரப்புத்துறை மற்றும் இளைஞர் நலன், விளையாட்டுத்துறை அமைச்சர் அனுராக்தாகூர், இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத்துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் ஆகியோர் சென்னை, சேப்பாக்கத்தில் ஆலோசனை மேற்கொண்டனர். தமிழ்நாட்டில் இளைஞர்நலன் மற்றும் விளையாட்டுத்துறையின் செயல்பாடுகள், விளையாட்டுத்துறை சார்பில் மேற்கொள்ளப்பட்டு வருகின்ற மேம்பாட்டுப் பணிகள் தொடர்பாக அலுவலர்களுடன் ஆலோசனை மேற்கொண்டனர்.