”கனடாவில் நான் வாழ விரும்பினேன், ஆனால் என் பட்டப்படிப்பிற்கு இங்கு மதிப்பில்லை” இந்திய வம்சாவளி பெண்!


கனடா நாட்டில் வேலை செய்ய விரும்பிய இந்திய வம்சாவளி பெண் தன் பட்டப்படிப்பிற்கு கனடாவில் மதிப்பில்லை என வருத்தத்துடன் தெரிவித்துள்ளார்.

கனடாவில் வாழும் கனவு

இந்தியாவின் பஞ்சாப் மாநிலத்தில் பிறந்த கோமல்தீப் என்ற இந்திய வம்சாவளி பெண் கனடாவில் தான் படித்த முதுகலை பட்டப்படிப்பிற்கு சரியான அங்கிகாரம் கிடைக்கவில்லை என வருத்தம் தெரிவித்துள்ளார்.

இந்தியாவில் பிறந்த கோமல் தீப் தனது நாட்டில் கனடாவில் வேலை வாய்ப்புகள் அதிகமிருப்பதாகவும், ஆடம்பரமான வாழ்க்கை வாழலாம் எனவும் உறவினர்கள் கூறுவதைக் கேட்டு தானும் கனடா செல்ல வேண்டும் என விரும்பியுள்ளார்.

”கனடாவில் நான் வாழ விரும்பினேன், ஆனால் என் பட்டப்படிப்பிற்கு இங்கு மதிப்பில்லை” இந்திய வம்சாவளி பெண்! | First Person Degree Was Worthless In Canada@Komaldeep/socia media

கட்டிடக்கலை துறையில் முதுகலைப் பட்டம் முடித்த அவர் முதலில் புதுடெல்லியில் பணிபுரிந்துள்ளார். பின்னர் அவருக்கு துபாய் செல்ல வாய்ப்பு கிடைத்திருக்கிறது.

துபாய் சென்ற கோமல் தீப் அங்கு சில ஆண்டுகள் கட்டிடக்கலை துறையில் பணிபுரிந்துள்ளார். அச்சமயம் தன்னோடு பணிபுரிந்த ஒரு இந்தியரை காதலித்து திருமணம் செய்து கொண்டுள்ளார்.

பட்டப்படிப்பிற்கு மதிப்பில்லை

கோமல் தீப்பிற்கு கனடா செல்ல வேண்டும் என்ற கனவு அதிகரித்தது. எனவே கடந்த 2021 ஆம் ஆண்டு கோமல் தீப் தம்பதியர் கனடாவிற்கு வந்திருக்கின்றனர். கோமல் கனடாவில் தனது முதுகலைப் பட்டத்தை வைத்து வேலை தேடியிருக்கிறார்.

ஆனால் அவருக்கு வேலை கிடைக்கவில்லை.

பின்பு கனடா நாட்டின் வணிகத்திற்கு ஏற்ப அவர் தனது அறிவை வளர்த்து கொள்ள விரும்பி கட்டிடக்கலை பற்றி கூடுதலாக ஒரு வருட பயிற்சி படிப்பு படித்துள்ளார்.

”கனடாவில் நான் வாழ விரும்பினேன், ஆனால் என் பட்டப்படிப்பிற்கு இங்கு மதிப்பில்லை” இந்திய வம்சாவளி பெண்! | First Person Degree Was Worthless In Canada@Komaldeep /socia media

இதற்காக அவர்கள் நிறைய செலவு செய்திருக்கிறார்கள்.

தன்னை பற்றி விவரங்கள் நிறைத்த தற்குறிப்பில் கூட அவர் தனது முதுகலை பட்டத்தை இணைத்துக் கொள்ளவில்லை.

ஆனால் அவருக்கு கனடாவில் சரியான வேலை கிடைக்கவில்லை. இதனால் மிகுந்த மன உளைச்சலுக்கு ஆளாகியுள்ளார்.

தன்னிடமிருந்த பணத்தையும் படிப்புக்காக செலவழித்து விட்டாகி விட்டது. மேலும் கல்வி விசாவிற்கான காலமும் முடிந்து விட்டது என தெரிவித்துள்ளார்.

”கனடாவில் நான் வாழ விரும்பினேன், ஆனால் என் பட்டப்படிப்பிற்கு இங்கு மதிப்பில்லை” இந்திய வம்சாவளி பெண்! | First Person Degree Was Worthless In Canada@Komaldeep /socia media

தற்போது மீண்டும் துபாயில் வசிக்கும் கோமல் தீப்

”கனடாவில் நான் படித்த பட்டப்படிப்பிற்கு மதிப்பில்லை, எனக்கு கனடாவில் வசிக்க வேண்டுமென ஆசையிருந்தது ஆனால் அது நடக்கவில்லை, கட்டிட கலையில் எனக்கு 9 வருட அனுபவம் இருந்தாலும் அதனால் எந்த பயனுமில்லை” என செய்தியாளர்களிடம் வருத்தத்தோடு தெரிவித்துள்ளார்.  



Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.