கனடாவின் மாண்ட்ரீல் நகரில் கத்தியால் கொடூரமாக தாக்கி உறவினர்கள் மூவரை கொலை செய்த இளைஞரை பொலிசார் சம்பவயிடத்திலேயே கைது செய்துள்ளனர்.
உறவினர்கள் மூவரை கொலை செய்த இளைஞர்
குறித்த இளைஞர் 19 வயதான ஆர்தர் கலர்னேவ் என அடையாளம் காணப்பட்டுள்ளதுடன், அவரது புகைப்படமும் தற்போது வெளியாகியுள்ளது.
மேலும், கொல்லப்பட்ட மூவரின் பெயர்களும் வெளியிடப்பட்டுள்ளது.
@Ryan Remiorz
75 வயதான Mylène Gingras, 53 வயதான Francine Gingras-Boucher, மற்றும் 53 வயதான Richard Galarneau ஆகியோரே அந்த மூவர் என பொலிஸ் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஆனால் இவர்கள் மூவரும் ஆர்தர் கலர்னேவுக்கு என்ன உறவு என்பது இன்னும் உறுதி செய்யப்படவில்லை என்றே கூறப்படுகிறது.
மேலும், கொலை செய்த இளைஞர் தொடர்பில் இதுவரை எந்த வழக்கும் பதியப்படவில்லை எனவும் பொலிஸ் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதனிடையே, கலர்னேவ் உளவியல் பாதிப்பு கொண்டவர் எனவும், அதன்பொருட்டு சிகிச்சை எடுத்துக் கொண்டவர் எனவும் கூறப்படுகிறது.
சம்பவத்தின்போது வெள்ளிக்கிழமை பகல் 9.20 மணியளவில் 911 இலக்கத்திற்கு அழைப்பு வந்துள்ளதாகவும், பெலங்கர் தெரு பகுதியில் ஒருவர் ஆபத்தான நிலையில் இருப்பதாகவும் பொலிசாருக்கு தெரிவிக்கப்பட்டுள்ளது.
மூவர் ஆபத்தான நிலையில்
இதனையடுத்து சம்பவப்பகுதிக்கு விரைந்த அதிகாரிகள் தரப்பு, அங்கே மூவர் ஆபத்தான நிலையில் காணப்படுவதை உறுதி செய்துள்ளனர். மேலும், பாதிக்கப்பட்ட அந்த மூவரும் கொடூரமான தாக்குதலுக்கு இலக்காகியுள்ளதையும் அதிகாரிகள் தரப்பு உறுதி செய்துள்ளது.
@Ryan Remiorz
இந்த நிலையில் தான், சந்தேக நபரை பொலிசார் கடும் போராட்டத்திற்கு பின்னர் கைது செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
தற்போது அந்த இளைஞர் மீது இரண்டாவது நிலை கொலை வழக்கு பதியப்பட்டுள்ளதாக பொலிஸ் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.