வாரணாசி: கடந்த 2017-ம் ஆண்டு உத்தர பிரதேச முதல்வராக யோகி ஆதித்யநாத் பொறுப்பேற்றார். இந்நிலையில் யோகி ஆதித்ய நாத் 2 நாள் பயணமாக நேற்று முன்தினம் வாரணாசி சென்றார். கடந்த 6 ஆண்டில் இது அவரது 113-வது பயணம் ஆகும்.
வாரணாசி சென்ற யோகி, நேற்று அங்குள்ள காசி விஸ்வநாதரை வழிபட்டார். கடந்த 6 ஆண்டில் அவர் விஸ்வநாதரை வழிபட்டது 100-வது முறை ஆகும். இதன்மூலம் காசி விஸ்வநாதர் கோயிலுக்கு 100 முறை சென்ற முதல் உ.பி. முதல்வர் என்ற பெருமை யோகி ஆதித்யநாத்துக்கு கிடைத்துள்ளது.