கிரெடிட் கார்டு பயனர்களுக்கு எச்சரிக்கை… மோசடியால் லட்சக்கணக்கில் இழப்பு – முழு விவரம்!

Credit Card Cyber Crime: மகாராஷ்டிராவின் புனே மாவட்டத்தில் சைபர் மோசடிக்காரர்கள், 50 வயது நபர் ஒருவரிடம் ரூ.7.6 லட்சத்தை மோசடி செய்துள்ளனர். கிரெடிட் கார்டு பின் நம்பரை உருவாக்க உதவுவதாக கூறி 50 வயது நபரை சைபர் வஞ்சகர்கள் ஏமாற்றினர். இச்சம்பவம் கடந்தாண்டு டிசம்பர் மாதம் 24ஆம் தேதி நடந்தது. இதுதொடர்பாக, கடந்த வியாழக்கிழமை (மார்ச் 16) வழக்குப்பதிவு செய்யப்பட்டது.

பாதிக்கப்பட்டவர் மகாராஷ்டிரா மாநில மின்சார டிரான்ஸ்மிஷன் கம்பெனி லிமிடெட் (எம்எஸ்இடிசிஎல்) ஊழியராக உள்ளார். அவர் தொழில்நுட்ப வல்லுநராகப் பணிபுரிகிறார். அந்த நபர் கடந்தாண்டு, டிசம்பர் 23 அன்று கிரெடிட் கார்டைப் பெற்றுள்ளார்.

பாதிக்கப்பட்ட அந்த நபர், பின்னை உருவாக்க கிரெடிட் கார்டில் குறிப்பிடப்பட்டுள்ள வாடிக்கையாளர் சேவை எண்ணை அழைத்தார். அதில், ஒரு வாடிக்கையாளர் சேவை அதிகாரி போல் ஒருவர் பேசியுள்ளார். அதன்மூலம், பாதிக்கப்பட்டவரின் அவரது அனைத்து அட்டை விவரங்களையும் எடுத்துக் கொண்டார்.

மோசடிக்காரர்கள், மூன்று OTPகளை பாதிக்கப்பட்டவரிடம் இருந்து பெற்றுள்ளனர் என கூறப்படுகிறது. அதன்பின், அவருடைய கிரெடிட் அட்டையை செயல்படுத்த முடியவில்லை என்றும் கூறப்படுகிறது. மறுநாள், புகார்தாரருக்கு மோசடி செய்பவரிடம் இருந்து அழைப்பு வந்தது. ரிமோட் அக்சஸ் அப்ளிகேஷனை தனது போனில் பதிவிறக்கம் செய்யும்படி கூறி, முழு செயல்முறையை முடித்துள்ளனர்.

மோசடிக்காரர்கள், பாதிக்கப்பட்டவரிடம் இருந்து 2 ரூபாயை ஆப் மூலம் அனுப்ப கூறியுள்ளார். ஆனால், பாதிக்கப்பட்ட நபருக்கு எப்படி ரூபாயை அனுப்ப வேண்டும் என தெரியவில்லை. எனவே, மோசடிக்காரர்கள் அவரிடம் இருந்து OTP-ஐ பெற்றுள்ளனர்.

பின்னர் இரவு 50 வயது முதியவர் தனது மகளின் போனுக்கு ரீசார்ஜ் செய்ய முயன்றபோது, அவரது கணக்கில் பணம் இல்லை என்பது தெரியவந்தது. இதையடுத்து அவர் போலீசாரை அணுகி சககர்நகர் போலீசில் புகார் செய்தார்.

இதையடுத்து போலீசார் இதுகுறித்து தீவிர விசாரணை நடத்தினர். முதற்கட்ட விசாரணையின் அடிப்படையில் போலீசார் எப்ஐஆர் பதிவு செய்தனர். புகார்தாரரின் பணம் இரண்டு கணக்குகளில் இருந்ததை போலீசார் கண்டுபிடித்தனர். இந்த வழக்கு தொடர்பாக இதுவரை யாரும் கைது செய்யப்படவில்லை.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.