குன்னூர்: கடும் வறட்சி காரணமாக உணவு மற்றும் தண்ணீரை தேடி காட்டு யானைகள் அடிக்கடி நீலகிரி மாவட்டம் குன்னூர் பகுதிக்கு படையெடுத்து வருகின்றன. இந்நிலையில், குன்னூர் மேட்டுப்பாளையம் மலைப்பாதையில் சாலையை கடக்க 3 காட்டு யானைகள் நேற்று வந்தன. அப்போது, வனத்துறையினர் இருபுறமும் வாகனங்களை நிறுத்தி யானைகள் செல்வதற்கு ஏதுவாக வழி ஏற்படுத்தி கொடுத்தனர்.
பின்னர், அங்கிருந்து ரயில் பாதை வழியாக குடியிருப்புக்குள் நுழைய முயன்ற 3 யானைகளை வனத்துறையினர் போராடி அருகே உள்ள வனப்பகுதிக்குள் விரட்டினர். மீண்டும் காட்டு யானைகள் வராமல் இருக்க வனத்துறையினர் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.