2023 ம் ஆண்டுக்கான ஐபிஎல் தொடரில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் மாற்று வீரராக சிசாண்டா மகலா தேர்வு செய்யப்பட்டுள்ளார்.
கைல் ஜேமிசன் விலகல்
2023 ம் ஆண்டுக்கான ஐபிஎல் கிரிக்கெட் போட்டிகள் மார்ச் 31ம் திகதி அகமதாபாத்தில் உள்ள நரேந்திர மோடி மைதானத்தில் தொடங்க உள்ளது.
இதில் நடப்பு சாம்பியனான குஜராத் டைட்டன்ஸ் அணியுடன் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி விளையாட உள்ளது.
இதற்கிடையில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்காக ஏலத்தில் 1 கோடிக்கு வாங்கப்பட்ட நியூசிலாந்து ஆல்ரவுண்டர் கைல் ஜேமிசன்(Kyle Jamieson) முதுகு காயம் காரணமாக சமீபத்தில் அறுவை சிகிச்சை செய்து கொண்டதால் 2023 ஐபிஎல் சீசனில் இருந்து விலகியுள்ளார்.
கைல் ஜேமிசன் இதற்கு முன்பு ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணியில் இடம் பெற்று இருந்தார்.
மாற்று வீரரை அறிவித்த சிஎஸ்கே
போட்டிகள் தொடங்க இன்னும் 10 நாட்களே இருக்கும் நிலையில், கைல் ஜேமிசனுக்கு மாற்று வீரரை சிஎஸ்கே (Chennai Super Kings) அணி நிர்வாகம் அறிவிக்காமல் இருந்தது.
இந்நிலையில், தற்போது நியூசிலாந்து ஆல்ரவுண்டர் கைல் ஜேமிசனுக்கு பதிலாக தென்னாப்பிரிக்க வேகப்பந்து வீச்சாளர் சிசண்டா மகலாவை(Sisanda Magala) ஒப்பந்தம் செய்வதாக சென்னை சூப்பர் கிங்ஸ் (சிஎஸ்கே) அறிவித்துள்ளது.
Magizhchi, Magala! Roar proud. 🥳#WhistlePodu #Yellove 🦁💛 pic.twitter.com/Hn3A94CcFa
— Chennai Super Kings (@ChennaiIPL) March 19, 2023
சிசண்டா மகலா, தென்னாப்பிரிக்காவுக்காக நான்கு டி20 போட்டிகளில் மட்டுமே விளையாடி உள்ளார், ஆனால் மற்ற டி20 போட்டிகளில் இதுவரை 136 விக்கெட்டுகளை வீழ்த்தி முழு மனதுடன் செயல்படுபவர் என்ற நற்பெயரை பெற்றுள்ளார்.
சமீபத்தில் சன்ரைசர்ஸ் ஈஸ்டர்ன் கேப் அணிக்காக சிசண்டா மகலா சிறப்பாக விளையாடினார்.