கொல்கத்தா: சமாஜ்வாடி கட்சி 2 நாள் தேசிய செயற்குழு கூட்டம் நேற்று கொல்கத்தாவில் துவங்கியது. இதுகுறித்து சமாஜ்வாடி கட்சியின் துணை தலைவரும் முன்னாள் அமைச்சருமான கிரண்மோய்நந்தா கூறுகையில்,‘‘ கட்சியின் தேசிய செயற்குழு கூட்டம் 11 ஆண்டுகளுக்கு பின் கொல்கத்தாவில் நடக்கிறது. 2 நாள் கூட்டத்தில் இந்தாண்டு நடக்கும் சட்டீஸ்கர்,ராஜஸ்தான்,மத்திய பிரதேச சட்டமன்ற தேர்தல்கள், அடுத்த ஆண்டு நடக்கும் மக்களவை தேர்தலுக்கான உத்திகள் பற்றி கூட்டத்தில் விவாதிக்கப்பட உள்ளது’’ என்றார்.
மேற்கு வங்க முதல்வரும் திரிணாமுல் காங்கிரஸ் தலைவருமான மம்தாவை அகிலேஷ் நேற்றுமுன்தினம் சந்தித்து பேசினார். அகிலேஷ் கூறுகையில்,‘‘ இரு கட்சிகளும் ஒன்று சேர்ந்து பாஜவை வீழ்த்த முடிவு செய்யப்பட்டுள்ளது. அதே நேரத்தில் பாஜ மற்றும் காங்கிரஸ் ஆகிய கட்சிகளிடம் இருந்து சமமான இடைவெளியில் நாங்கள் பயணிக்கிறோம்’’ என்றார்.